Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, November 30, 2011

மனித குலத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் விடப்பட்ட சவால்!?

மனித குலத்தின் இறையாண்மைக்கும், விஞ்ஞான அறிவுக்கும் விடப்பட்ட சவால், "எய்ட்ஸ்'. உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு தடுப்பு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரணத்தை சிறிது காலம் தள்ளிப்போட மட்டுமே மாத்திரைகள் உள்ளன.

இந்த நோய் பாதிப்பால், மனிதநேயமும், குடும்ப உறவுகளும் குப்பைக்கு சென்று கொண்டிப்பது வேதனைக்குரிய ஒன்று. எய்ட்ஸ் பாதித்தோரை, ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பதும், குடும்பத்தில் இருந்து வெளியேற்றுவதும் வாடிக்கையாக அரங்கேறுகிறது. அத்தகைய புறக்கணிப்பு, மனிதநேய மாண்பு சிதையுற்றும், சீரழிந்தும் இருப்பதையே நமக்கு உணர்த்துகிறது.

இன்றைய சூழலில், எய்ட்ஸ் பாதித்தோருக்கு அன்பும், ஆதரவும் கொடுத்து பாதுகாக்க வேண்டியது அவசியம். எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு, நாட்டின் அனைத்து பகுதியிலும் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. விழிப்புணர்வு மூலம் நோய் பாதித்தோரை அரவணைக்கும் சூழ்நிலையை உருவாக்க முடியும்.உலகத்தில் வாழும் மனிதர்களுக்கு ஏற்பட்ட ஆபத்துதான் எய்ட்ஸ் நோய் என்பதை நினைவூட்டும் நாள் இன்று (டிச., 1).

இந்தியாவில், ஹெச்.ஐ.வி., எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மிசோராம், நாகாலந்து உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி தொழிலுக்கு மையமாக இருக்கும் நாமக்கல் மாவட்டம், கடந்த 2005ல் தமிழகத்திலேயே ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. பல்வேறு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தால், நாமக்கல் மாவட்டத்தில் ஹெச்.ஐ.வி., பாதிப்பு குறைந்து, முதலிடத்தில் இருந்து மூன்றாமிடத்துக்கு வந்துள்ளது.தமிழகத்தில், தேனி, கரூர் மாவட்டங்கள் ஹெச்.ஐ.வி., பாதிப்பில் முன்னணியில் உள்ளன. நாமக்கல் மாவட்டம் போன்று அம்மாவட்டங்களிலும் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியம்.

2 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!