Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, November 15, 2011

பொழுது போக்கு பிசினசாக மாறியது பவித்ரா !!

பேஷன் நகை டிசைனர் பவித்ரா: வீட்டிலேயே இருந்து நாமளே ஏதாவது தொழில் செய்யணும்னு தான் நான் செய்துக்கிட்டிருந்த வேலையை விட்டேன். எதையும் செய்ய முடியுங்கிற நம்பிக்கை இருந்தது.

ஆனா, என்ன செய்யப்போறோம்னு தெளிவு இல்லை. அப்பதான் ஒரு ஐடியா வந்தது. பர்சனல் பயன்பாட்டுக்காக, "ஆர்டிபிசியல் ஜுவல்லரி' நான் செய்வதுண்டு. சின்ன முதலீட்ல வீட்டிலிருந்தே நகை செஞ்சு விற்க ஆரம்பித்தேன்.கோரல், பேர்ல், ஜேட், ஒனிக்ஸ், எமரால்ட், ரூபி என, இன்னும் நிறைய விதமான கற்களை, அமெரிக்காவிலிருந்து மொத்தமா வரவழைச்சு வெச்சிருக்கேன்.

அங்கேயிருந்து வாங்கி வருகிறவர்கள் அதை அப்படியே மொத்தமா கோர்த்து மாட்டிக்கிறாங்க. ஏன் இதை டிசைனா, பலவித கற்களோட மேட்ச் செஞ்சு அழகான நகை செய்யக் கூடாதுனு தோன்றியது.ஜெய்ப்பூர் தயாரிப்பாளர்கிட்ட நேரடியா தரமான மணிகள் வாங்கி, முதல்கட்டமா தெரிஞ்சவங்களுக்கு டிசைன் செய்து தந்தேன். அப்படியே என் பிசினஸ் வளர ஆரம்பிச்சு, இப்ப நான் நம்பமுடியாத அளவுக்கு என்னை வளர்த்திருக்கு.

பெண்களுக்கு பொதுவா நிறைய டிஸ்பிளே வேணும். நிறைய நகைகளை கண்முன்னே பாத்தாதான் அதுல ஒண்ணு செலக்ட் பண்ணுவாங்க. என்கிட்ட 10, 15 செட் நகைகள் தான் இருக்கும். இந்த பிரச்னையை சமாளிக்கிறதுக்காக, "கேட்லாக்' ரெடி பண்ணினேன். இப்ப என்னோட பிசினஸ் நல்லபடியா போயிக்கிட்டிருக்கு. நிறைய ஆர்டர்களும் கிடைக்குது. நல்ல லாபமும் கிடைக் குது.

Reactions:

1 comments :

மேடம், எங்களுக்கு எப்படி செய்யவேண்டும் என்று சொல்லிதர முடியுமா?
சுபா கோவையில் இருந்து

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!