Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, November 17, 2011

பிரிட்டன் ஆட்குறைப்பால் அதிர்ச்சிக்குள்ளான இந்தியர்கள்!

லண்டன் : இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியனை சேராத நாடுகளிலிருந்து பணிதொடர்பாக, இங்கிலாந்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்தின் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 40 ஆயிரம் பேர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்தியர்கள் உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இங்கிலாந்து அரசின் குடியேற்றத்துறை ஆலோசனை குழு, பணியாளர் குறைப்பை எந்தெந்த துறைகளில் எல்லாம் மேற்கொள்ளலாம் என்பதன் விபரத்தை, பிரதமர் டேவிட் கேமரூன் பார்வைக்கு வைத்தது. இந்த பரிந்துரைக்கு, பிரதமர் கேமரூனும் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, இந்த பணியாளர் குறைப்பு பட்டியலில், மருந்தாளுனர்கள் (பார்மசிஸ்ட்கள்), கால்நடை மருத்துவர்கள், பேச்சு மற்றும் லாங்குவேஜ் தெரபிஸ்ட்கள், மேல்நிலைக் கல்வி உயிரியல் ஆசிரியர்கள், ஆர்‌தோப்டிஸ்ட்கள், இசை வல்லுனர்கள் உள்ளிட்ட துறைகள் இடம்பெற்றுள்ளன.

இன்சூரன்ஸ் மற்றும் நிதி சம்பந்தமான நுணுக்கம் பெற்றவர்கள் மற்றும் பைப் வெல்டர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் என பல பிரிவுகளில் சிறந்து விளங்கும் நம்நாட்டவர்களுக்கு இங்கிலாந்தின் இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!