அவசரகால உலகில் அவசரத்தில் உட்கொள்ளும் உணவுகள் (FAST FOOD) நம் உடலுக்கு எவ்வளவு தீங்குகளை விளைவிக்கிறது, இதுமட்டுமல்ல கூடிய விரைவில் தொப்பை விழுந்து வயதானவர்கள் போல் காட்சி அளிக்கிறது.
நாம் பெரும்பாலும் அரிசி சார்ந்த உணவு வகைகளைத் தான் சாப்பிட்டு வருகிறோம். இந்த வகை உணவுகள் நமக்கு சத்தை அளிப்பதை விட, உடலைப் பெருக்கி விடும் தன்மை கொண்டது. மேலும் கலோரி அளவீடுகள் பற்றி தெரியாமல் வெண்ணெய், இனிப்புப் பண்டங்கள் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவதால், தொப்பை, உடல் பருமன் மற்றும் இதயநோய் போன்றவை வந்து விடுகிறது.
தற்போது `பாஸ்ட்புட்' என்ற பெயரில் நமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் உணவையே துரித உணவாக்கி விட்டோம். இதனால், கொழுப்பு அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல. புற்று நோய், சர்க்கரை நோய் என்று நம் உடலுக்கு புதுப்புது நோய்கள் எல்லாம் தேடி வந்து விடுகின்றன. இவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதற்குத் தான் உணவுக்கட்டுப்பாடு தேவை.
இதையே ஆங்கிலத்தில் `டயட் கண்ட்ரோல்' என்று சொல்வர். அதற்காக காலை நேர உணவைத் தவிர்ப்பது நல்லதல்ல. காலையில்தான் அதிக அளவு கலோரிகளுடன் கூடிய உணவை சாப்பிட வேண்டும். நமக்குத் தேவையான கலோரிகளை கணக்கிட்டுக் கொண்டு உணவை சாப்பிடுவது நல்லது. இதனால் உடல் ஆரோக்கியம் சீராகிறது. சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 2500 கலோரிகள் தேவை.
0 comments :
Post a Comment