Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, November 3, 2011

கதர் கோவணத்துக்கு கோடிகள் எதற்கு? வந்தது எப்படி!?

புதுடெல்லி: அன்னா ஹஸாரே குழுவினருக்கு கடந்த ஆறுமாதத்தில் நன்கொடையாக 2.94 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில் 1.14 கோடி ரூபாய் ராம்லீலா மைதானத்தில் 12 தினங்கள் நடந்த உண்ணாவிரதப்போராட்டத்தின் வாயிலாக கிடைத்ததாகும்.

27,505 பேர் நன்கொடை வழங்கியதாக ஹஸாரே குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தவர்களும் உள்ளனர்.400க்கும் மேற்பட்டவர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகையை வழங்கியுள்ளனர்.

பணத்தின் உறைவிடத்தை குறித்து தெளிவான விபரங்கள் அளிக்காமல் நன்கொடையாக வழங்கியவர்களின் 42.55 லட்சம் ரூபாய் திருப்பி அளிக்கப்படும் என ஹஸாரே குழுவினர் தீர்மானித்துள்ளனர். ஹஸாரே குழுவினரின் செயலகமான பப்ளிக் காஸ் ரிசர்ச் ஃபவுண்டேசன்(பி.சி.ஆர்.எஃப்) ஏப்ரல் முதல் தேதி துவங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஹஸாரே குழுவைச்சார்ந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக பொருளாதார ரீதியிலான குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அக்குழுவினரின் தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது. பி.சி.ஆர்.எஃபின் அறங்காவலர்களில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே போன்ற பிரமுகர்கள் இல்லை என்பது சுவாமி அக்னிவேஷின் குற்றச்சாட்டாகும்.நன்கொடையாக கிடைத்த தொகையிலிருந்து 1.5 கோடி ரூபாய் ஹஸாரே குழுவினர் செலவழித்துள்ளனர்.

அதேவேளையில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து கிடைத்த 42.55 லட்சம் ரூபாயை திருப்பியளிக்க ஹஸாரே குழுவினர் தீர்மானித்துள்ளதை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து நன்கொடையை பெறுவதும், அதனை அவர்களுக்கு திருப்பியளிப்பதும் அமானுஷ்ய சக்தி உடையவர்களால் மட்டுமேசெய்யமுடியக்கூடிய வித்தை என திக்விஜய்சிங் கிண்டலாக கூறியுள்ளார்.

இந்த பரதேசிகளுக்கு இவ்வளவு பணம் ஏது, எங்கிருந்து வந்தது எல்லாம் ஹவாலா வெளிநாட்டிலிருந்து வந்து சேர்ந்தது (இது புதுவித ஹை டெக் பிஸ்னஸ்) சாமியார் வேஷம் மாறி இது உண்ணா விரத காசு பார்க்கும் பிஸ்னஸ்., நல்லொழுக்கம் பேசும் இவர்கள் இதுவரை எந்த வரியும் (TAX) இதுவரை கட்டவில்லை. ஆம் இவர்கள்தான் முச்சந்தி பிச்சக்காரர்கலாச்சே.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!