Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, November 15, 2011

அனைவரும் ஒன்று கூடும் ராம்லீலா மைதான மாநாடு

புதுடெல்லி : வருகிற 26,27 தேதிகளில் புதுடெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறவிருக்கும் சமூக நீதி மாநாட்டிற்காக தேச முழுவதும் நடைபெறும் பிரச்சாரத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பிரிவு மக்களிடையே உற்சாகமளிக்கும் ஆதரவு பெருகிவருவதாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் சமூக நீதியின் மாநாட்டிற்கான செய்தியை கொண்டு சேர்க்க பிரச்சாரங்கள் உதவியுள்ளன. பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.

‘நீதியால் தேசத்தை கட்டமைப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்த கருத்தரங்குகளும் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளன.

சமூக நீதியின் செய்தியை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்ட தெருமுனைக் கூட்டங்கள் பெருமளவிலான மக்களை ஈர்த்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கிளைகள் இல்லாத பகுதிகளில் கூட மக்களிடமிருந்து நம்பிக்கையை ஏற்படுத்தும் ஆதரவு பேரணிகளுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் கிடைத்துள்ளது.

இணையதளங்களில் சமூக கூட்டமைப்புகள் வாயிலாக நடத்தப்படும் பிரச்சாரங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக பாப்புலர் ஃப்ரண்டின் ஊடகத்துறை பொறுப்பாளர் அனீஸ் அஹ்மத் தெரிவித்துள்ளார். இன்று முதல் கூடுதல் வலுவான பிரச்சார பணிகள் குறிப்பாக தேசிய தலைநகரில் நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர்கள், அமைப்புகள், அறிவுஜீவிகள், ஊடகங்கள், போலீஸ், ஆட்சியாளர்கள் ஆகியோரிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பும், ஆதரவும் நம்பிக்கை அளிப்பதாக அனீஷ் அஹ்மத் கூறுகிறார்.

எதிர்பார்த்தை விட அதிக மக்கள் கூட்டம் டெல்லி மாநாட்டில் கலந்துக்கொள்வார்கள் என்பது பிரச்சார வேளைகளில் மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவின் மூலம் தெரியவருவதாக பாப்புலர் ஃப்ரண்டின் அறிக்கை கூறுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!