புதுடெல்லி: 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை பிடிப்பது சிரமமான காரியம் என்று சங்க்பரிவாரங்களின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடுகளான ‘ஆர்கனைசர்’ மற்றும் ‘பாஞ்சசன்யா’ ஆகியவற்றின் தலையங்கங்களில் இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
‘உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸின் அதே நிலைமை பா.ஜ.கவுக்கும் ஏற்பட்டுள்ளது. தொண்டர்களை விட பா.ஜ.கவில் தலைவர்கள்தாம் அதிகம். உ.பியில் மக்களுடனான உறவை பா.ஜ.க இழந்துவிட்டது’ என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது.
2007 உ.பி சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற சீட்டுகளை விட தற்பொழுது 4 இடங்கள் குறைவாகவே பா.ஜ.க வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உ.பி தேர்தலில் 47 இடங்கள் மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்தன.
இந்தியாவில் எங்கும் தோல்விகளே ஹிந்துத்துவவாதிகளுக்கு., தீவிரவாதத்தால் ஒன்றும் இந்தியாவில் (கோயில் கட்டுவேன் கும்பாபிசேகம் பண்ணுவேன்) செய்ய முடியாது என்பதை உணர்ந்தால் சரிதான் ஹிந்துத்துவவாதிகள்.
0 comments :
Post a Comment