Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, March 5, 2012

மகாத்மா காந்தி கனவுகண்ட இந்தியா வேண்டுமா! இல்லை..!?

வாஷிங்டன்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மத சுதந்திரத்தை புனரமைக்க வேண்டும் என்று கோரி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பு சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினத்தில் கெய்த் எலிஸன் என்பவர் இத்தீர்மானத்தை கொண்டுவந்தார்.

டெமோர்க்ரேட்டுகளின் பிரதிநிதியான எலிஸன், 2007 முதல் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர் ஆவார். மேல் நடவடிக்கைக்காக தீர்மானம் வெளியுறவு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத் இனப் படுகொலையில் கொலைச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மோடியின் அரசு எடுக்கவில்லை என்று தீர்மானம் குற்றம் சாட்டுகிறது.

குஜராத்தில் மத சுதந்திரம் மறுக்கப்பட்டதை தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்தது. 1998-ஆம் ஆண்டு சர்வதேச மத சுதந்திர சட்டத்தில் இதற்கான அனுமதி உள்ளது என்று தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. இத்தீர்மானத்தை இந்திய-அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் வரவேற்றுள்ளது. இனப் படுகொலையில் கொலைச் செய்யப்பட்டவர்கள் மீதான மிக சிறந்த மதிப்புதான் இந்த தீர்மானம் என்று கவுன்சிலின் அறிக்கை கூறுகிறது.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற வகுப்புக் கலவரங்களின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக அமெரிக்காவில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட இந்திய அமைப்புகள் ஒன்றிணைந்து, மெழுகுவர்த்தி ஏந்தி மோடிக்கு எதிராகவும், கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும் கோஷமெழுப்பினர்.

"இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டமைப்பு' என்ற அணியாக 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டிருந்தனர். மன்ஹாட்டனில் நடைபெற்ற இந்தப் போராட்டம் காந்தி சிலைக்கு அருகில் நடபெற்றது.

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், குற்றவாளிகளை நீதிக்கு முன்னால் நிறுத்த வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தினர். பெண்களும், சிறுவர்களும் மோடிக்கு எதிராகவும், குஜராத் அரசுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட "இந்திய-அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின்' கிழக்குப் பகுதியின் துணைத் தலைவர் முகமது யூசுப் கடானி, "காந்தி கனவு கண்ட இந்தியா வேண்டுமா" அல்லது மோடியின் இந்தியா வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவே காந்தி சிலைக்கு அருகில் போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகள் சபையில், குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படவில்லை என்றும், மாநிலத்தில் மதச் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்று சமீபத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தச் சூழ்நிலையிலேயே மோடிக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!