தேனி: திண்டுக்கல்லை சேர்ந்தவர் இந்தர்கணேஷ்,28. அமெரிக்காவில் கப்பலில் பணிபுரிகிறார். இவர், தன்னுடன் வேலை பார்க்கும் இத்தாலி பெண் லியோநினா,28,வுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். நிச்சயதார்த்தம்: இந்தர்கணேஷ் இரண்டு மாதங்களுக்கு முன், தேனியை சேர்ந்த மீன் வியாபாரி ஜெயபால் மகளை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்தார்.
இத்தகவல் இந்தர்கணேஷ் நண்பர்கள் மூலம் லியோநினாவுக்கு தெரிய வந்துள்ளது.கெஞ்சல்: அமெரிக்காவில் இருந்து திண்டுக்கல் வந்த லியோநினா, இந்தர்கணேஷ் வீட்டிற்கு சென்றார். தனக்கும்-இந்தர்கணேஷிற்கும் உள்ள தொடர்பை கூறி, தேனி பெண்ணுடன் திருமணம் செய்யக்கூடாது என கணேஷின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். தீர்வு கிடைக்காததால், தேனி பெண் நிச்சயதார்த்த போட்டோ ஆல்பத்தில் இருந்த ஸ்டுடியோவிற்கு போன் செய்து, ஜெயபால் மொபைல் எண்ணை வாங்கி தகவல் தந்தார். ஜெயபால் தன் குடும்பத்துடன் இந்தர்கணேஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு ஜெயபால் காலில் விழுந்த லியோநினா கதறி அழுதுள்ளார்.
நான்கு ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்வதாகவும், இனிமேல் ஒரு பெண் தங்கள் வாழ்க்கையில் குறுக்கே வரக்கூடாது. மீறி திருமணம் நடந்தால் வக்கீல் மூலம் அந்த திருமணத்தை எதிர்க்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ஜெயபால் தனது மகளுக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி போலீசில் புகார் செய்தார்.
வழக்கு: இந்தர்கணேஷ் மீது தேனி போலீசார் வழக்குபதிவு செய்ததை உறுதி செய்த பின் லியோநினா அமெரிக்கா கிளம்பினார். அதுவரை திண்டுக்கல்லில் 23 நாட்கள் இந்தர்கணேஷ் வீட்டில் தங்கியிருந்தார்.புத்திசாலி: ஜெயபால் கூறுகையில்,""லியோநினா புத்திசாலி. தங்கள் திருமண வாழ்க்கைக்கான ஆதாரங்களை சேர்த்து வைத்துள்ளார். திருமண ஆதாரமாக 63 போட்டோக்களை எங்களுக்கு அனுப்பி உள்ளார். எனது புகார்படி போலீசார் இந்தர் கணேஷை கைது செய்தனர்,'' என்றார்.
1 comments :
தேனி பெண் நிச்சயதார்த்த போட்டோ ஆல்பத்தில் இருந்த ஸ்டுடியோவிற்கு போன் செய்து,[ WHO IS -ஜெயபால்] ஜெயபால் மொபைல் எண்ணை வாங்கி தகவல் தந்தார். ஜெயபால் தன் குடும்பத்துடன் இந்தர்கணேஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு ஜெயபால் காலில் விழுந்த லியோநினா கதறி அழுதுள்ளார்.
Post a Comment