அமெரிக்காவில் மசாசு செட் மாகாணத்தில் உள்ள டெர்ராபுஜியா என்ற நிறுவனம் பறக்கும் கார் தயாரித்துள்ளது. இந்த காரில் விமானத்தில் உள்ளது போன்று இறக்கைகள் உள்ளன. அவை விண்ணில் பறக்கும் போது 30 வினாடிகளில் பறவை போன்று தனது சிறகை (இறக்கையை) விரிக்கும்.
தரை இறங்கி கார் ஆக மாறியவுடன் அவை மடிந்து விடும். பெட்ரோல் மூலம் விண்ணில் பறக்கும் இந்த கார் மணிக்கு 110 மைல் வேகத்தில் 460 மைல் தூரம் பறக்க கூடிய திறன் படைத்தது.
இந்த காரின் விலை ரூ.1 கோடியே 40 லட்சம். அடுத்த மாதம் (ஏப்ரல்) 6 முதல் 15-ந் தேதி வரை நியூயார்க்கில் சர்வதேச ஆட்டோ கண்காட்சி நடக்கிறது.
அதில் கார் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இப்போதே இந்த காருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பலர் ஆர்டர் கொடுத்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 100 பறக்கும் கார்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதாக டெர்ராபுஜியா கம்பெனியின் அதிகாரி அன்னா ரேக் டயட்ரிச் தெரிவித்துள்ளார்.
1 comments :
namma oorukku vara 1o varusamakalam?
Post a Comment