Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, March 20, 2012

கூடங்குளம்! கலை கூத்தாடியின் கபட நாடகம் வெட்ட வெளிச்சம்?

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த தமிழக அரசின் (கூத்தாடி ஜெயா) நிலைப்பாடு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தின் மூலம் வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து கூடங்குளம் போராட்டக் குழுவினரைக் கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இடிந்தகரை விரைந்த உதயக்குமார், அங்குள்ள லூர்து மாதா சர்ச் வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கும் அவர் இன்று 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உதயக்குமார் அமர்ந்திருப்பதால் மக்கள் தடுப்பை மீறிச் சென்றால் ஏதாவது பிரச்சினையாகி விடுமோ என்று போலீஸார் அஞ்சுகின்றனர். இதனால் மக்களுடன் பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். உதயக்குமாரைக் கைது செய்ய ஒத்துழைப்பு தருமாறு அவர்கள் கோரி வருகின்றனர்.

இதுகுறித்து ஐஜி ராஜேஷ் தாஸ் கூறுகையில், உதயக்குமாரை போலீஸாரிடம் ஒப்படைக்கும்படி மக்களை கேட்டு வருகிறோம். இதற்காக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்புடன் உதய குமாரைக் கைது செய்வோம். எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என்றார்.

இந்நிலையில் தமிழக அரசின் இம்முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று மாவட்டங்களை சேர்ந்த 15,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் அவர்கள் கூடங்குளத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் கடல் வழியாக கூடங்குளம் வர துவங்கியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

3 comments :

கூடங்குளத்தில் ஜெயா அரசின் பாசிச அடக்குமுறை!
selvam.

I have nоt found many blogs that cоntain suсh consistently readable and infоrmаtive сontеnt as is οn offer heгe, уou deserve the short time it has taκen to jοt down my appгeciation οf your hаrd work.
Mаny thanκs.
Also see my page - consider shoe lifts

In a future post, I hορe to run through ѕome οf the reаѕοning behind our chоіcеs.
Great reаsonіng hеre. І really enjοy ѵіeωing yоur blog.
I've learned a vast amount from them.
Take a look at my page ... growth-flex v pro

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!