Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, March 14, 2012

வெளிநாட்டு கம்பெனிகளுடன் போட்டி புற்று நோய்க்கான மருந்து

புதுடெல்லி: 2.84 லட்சம ரூபாய் மதிப்புடைய புற்று நோய்க்கான மருந்து ரூ.8880 க்கு விற்பனைச் செய்ய மத்திய அரசு ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் நாட்கோ ஃபார்மாவுக்கு(Natco Pharma) அனுமதி அளித்துள்ளது.

ஜெர்மன் பன்னாட்டு நிறுவனமான பேயர் கார்ப்பரேசன்(Bayer Corporation) தயாரிக்கும் நெக்ஸாவர்(Nexavar 200mg) 200 எம்.ஜி என்ற மருந்து தற்பொழுது கிடைக்கும் விலையில் 30 மடங்கு குறைந்த விலைக்கு தயாரிக்கவும், விற்பனைச் செய்யவும் ஹைதராபாத்தில் உள்ள மருந்து கம்பெனிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்திய காப்புரிமை(patent right) சட்டத்தின் 84-வது பிரிவு அடிப்படையில் மத்திய அரசு இந்திய நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

120 மாத்திரைகள் அடங்கிய நெக்ஸாவரின் விலை பாக்கெட் ஒன்றிற்கு 2.84 லட்சம் ரூபாய் ஆகும். இது நுரையீரல், கிட்னி கான்ஸரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருந்தாகும்.

அதேவேளையில் இந்தியாவில் காப்புரிமை கட்டுப்பாட்டாளரின் முடிவு தங்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாகவும், தங்களது அறிவு சார்ந்த சொத்துரிமையை(intellectual patent rights) பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை குறித்து ஆலோசித்து வருவதாகவும் பேயர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

2008-ஆம் ஆண்டு பேயர் நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்கிய பிறகும் தேவைக்கு மருந்து அளிக்காத சூழலில் இந்திய நிறுவனத்திற்கு காப்புரிமையை வழங்கியதாக காப்புரிமை கட்டுப்பாட்டாளர் (patent controller) பி.ஹெச்.குரியன் கூறியுள்ளார்.

உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி தேவைப்பட்டால் தேசிய அரசுக்கு கட்டாய லைசென்ஸ் வழங்க உரிமை உண்டு.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!