சென்னை: மின் தடையால் இருண்ட மாநிலமாக மாறிவரும் தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு மூலம் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசு. ஏற்கனவே பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றால் அவதிக்குள்ளாகும் மக்களை வாட்டும் விதமாக வெளியாகியுள்ள இக்கட்டண உயர்வு ஒரு வருடத்திற்காம். இந்த கட்டண உயர்வு வரும், ஏப்ரல் 1- முதல் அமலுக்கு வருகிறது.
எவ்வளவுதான் மக்களை விரோத ஆட்சியை நடத்தினாலும் காசு கொடுத்தால் ஓட்டுக்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆட்சிபுரியும் அ.இ.அ.தி.மு.க அரசின் தொடர் அராஜ போக்கை இம்மின்கட்டண உயர்வு உணர்த்துகிறது.
மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவேயில்லை. கடந்த திமுக ஆட்சியில் ஒரு சில பிரிவுகளுக்கு மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இப்படி மின் கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருப்பதால் மின்வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்று தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் எடுத்துரைத்தது. மேலும் எந்த பிரிவுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என்பதையும் அரசு முடிவு செய்து ஆணையத்திடம் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தது.
இதையடுத்து ஆணையம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை எவ்வளவு உயர்த்துவது, வீடுகள், தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடிற்கான கட்டணத்தை எவ்வளவு அதிகரிப்பது என்பதை ஆணையம் முடிவு செய்தது.
மேலும் சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கான கட்டண உயர்வை அமுல்படுத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் நாகல்சுவாமி, வேணுகோபால் ஆகியோர் மின்கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும் என்றும், விசைத்தறிக்கு 500 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது., இந்த கட்டண உயர்வு மூலம் ஓர் ஆண்டிற்கு ரூ.7874 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் அரசுக்கு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மக்களை ஏமாற்றும் இந்த த(பாசிச)அரசு இதன் அபாய காரணத்தை உணர்ந்தும் கூடங்குளம் மின்சாரம் முழுமையாக தமிழ் நாட்டுக்கே என்று மேலும் ஏமாற்ற பார்க்கிறார் ஜெயலலிதா.
2 comments :
kaalam maarum..........
http://www.dunkindonutscoupons.com
Good site you've got here.. It's difficult
to find high quality writing like yours nowadays.
I truly appreciate individuals like you! Take care!!
My weblog :: seo (http://seofornown4eva.com)
Post a Comment