Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 25, 2012

உடல் பருமனுக்கு உணவுதான் காரணமா! ஆய்வு தகவல்!!

லண்டன்: பசி இல்லாவிட்டாலும், ஒரு சிலர் எப்போதும் எதையாவது சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள் அவர்கள் சாப்பாட்டு ராமன், பெருந்தீனி தின்பவர்கள் என்பன போன்ற ஏராள பேச்சுகளுக்கு ஆளாக்கின்றன.

அவர்கள் விரும்பி பெருந்தீனி சாப்பிடுவது இல்லை, அதற்கு அவர்களின் உடலில் உள்ள ஒருவித மரபணுவே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மெடிக்கல் சென்டரின் விஞ்ஞானிகள் எலிகளிடம் இதுகுறித்து ஆய்வு நடத்தினார்கள். அப்போது அதில் இருந்த பி.டி.என்.எப். என்ற மரபணு உடைந்து அது சாப்பிட்டது போதும் என்ற கட்டளையை மூளைக்கு செல்லவிடாமல் தடுக்கிறது.

அதனால்தான் பசி இல்லாவிட்டாலும் எலி தொடர்ந்து எதையாவது தின்று கொண்டே இருந்தது. அதன் மூலம் உடல் எடை பெருத்து கொளுத்து விட்டது. இதை மரபணு மனிதர்களின் உடலிலும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எலிகளின் உடலில் நடப்பது போன்றே மனிதர்களின் உடம்பிலும் இதுபோன்ற மாற்றங்கள் நடக்கலாம் என கருதுகின்றனர். இதனால்தான் தொடர்ந்து சாப்பிட்டு உடல் குண்டாகி விடுகிறது.

இந்த பி.டி.என்.எப். மரபணுவை தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தைகளிடம் கண்டறிந்து அதற்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!