Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, March 23, 2012

கூடங்குளம் போராட்டக்காரர்களை மிரட்டும் பாசிச அரசு!!

திருநெல்வேலி:கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்த கரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அணு உலை எதிர்ப்புக்குழு தலைவர் உதயகுமார் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க செல்ல முயன்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், பெரியார் திராவிட கழகத்தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பு தலைவர் சீமான் உள்பட 500க்கும் மேற்பட்டோர் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக பாளையங்கோட்டையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி திமுக, எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃப்ரண்ட் உட்பட பல்வேறு அமைப்பினர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வைகோ, நெல்லை முபாரக், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பேரணியாக இடிந்தகரை நோக்கிச் செல்ல முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பாளையங்கோட்டை, கூடங்குளம் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போராட்டம் பற்றி மனித ஆர்வலர் கூறும்போது: கூடங்குளம் போராட்டக்காரர்களை ஜெயா அரசு (பார்ப்பனிய பாசிச) அடக்குமுறையை கட்டவிழ்த்து உள்ளது என்றார், மேலும் அவர் கூறுகையில் இந்த அடக்கு முறையால் மக்கள் ஒன்றும் பயந்தவர்களாகவோ அல்லது இந்த போராட்டத்தை விட்டு ஒதுங்கிவிடுவார்கள் என்று மத்திய மாநில அரசுகள் நினைக்க வேண்டாம் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!