நியூயார்க்: சிகரெட் பிடிப்பவர்கள், உடல் குண்டானவர்கள் மற்றும் ரத்தத்தில் கொழுப்பு சத்து இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால் இவர்களுக்கு எப்போது நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பு ஏற்படும் என்பதை டாக்டர்களால் முன் கூட்டியே அறிய முடிவதில்லை.
தற்போது ஒரு சிறிய ரத்த பரிசோதனை மூலம் மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகளை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் உள்ள எண்டோ திலியல் செல் (உள் அடுக்கு படலம்) மாரடைப்பு நோயாளிகளுக்கு வழக்கத்தை விட மிகப் பெரிய மாறுபட்ட வடிவிலும், அதிக எண்ணிக்கையிலும் இருக்கும். அதை வைத்து மாரடைப்பு நோய் ஏற்படுவதை முன் கூட்டியே அறிய முடியும்.
இதற்கான சோதனையை மாரடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 50 பேரிடம் நடத்திய சோதனையில் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இந்த சோதனை இன்னும் 2 ஆண்டுகளில் நடை முறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment