பொதுவாக சினிமா பிரபலங்களின் வாரிசுகள், சினிமா துறைக்கே வர விரும்புவர். ஆண்கள்-நடிகர்களாகவும், பெண்கள்-நடிகைகளாகவும் வர விரும்புவர். ஆனால் சமீபத்திய தமிழ் சினிமாவில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்றே சொல்லலாம். பிரபலங்களின் பெண் வாரிசுகள் இப்போது டைரக்க்ஷன் துறையில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். அவர்கள் யார், யார் என்பதை இங்கே காணலாம்.
ஐஸ்வர்யா தனுஷ் : ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து 3 என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே டைரக்டர்கள் சுரேஷ் கோபி, செல்வராகவன் ஆகியோருடன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
ஸ்ருதிஹாசன் : நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் முதலில் இசை மூலம் மக்களிடம் அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் பிஸி நடிகையாக உள்ளார். ஆனால் இவருக்குள்ளும் இயக்குநர் ஆசை முதல் பல திறமைகள் பொதிந்து கிடக்கிறது. நடிப்பு, இசையை தவிர விரைவில் ஸ்ருதியின் அதிரடியான மற்றொரு பக்கத்தை பார்க்கலாம்.
அக்ஷ்ராஹாசன் : கமல்ஹாசனின் இரண்டாவது வாரிசான இவர் ஆரம்பத்திலிருந்தே நடிப்பு மீது ஆர்வம் இல்லை, டைரக்ஷ்னில் தான் ஆர்வம் இருக்கிறது என்று கூறி வருகிறார். தற்போது தன்னுடைய அப்பா இயக்கும் விஸ்வரூபம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். விரைவில் தன்னுடைய அப்பாவை வைத்தும் இயக்கும் எண்ணத்தில் உள்ளார். சமீபத்தில் ரஷ்யன் கல்ச்சரில் டான்ஸ் பயிற்சியின் போது நாம் அவரிடம் எப்போது நடிக்க வருவீங்க என்று கேட்டபோது, மணி அங்கிள் படத்தில் நடிக்க கேட்டாங்க, ஆனால் சாரி அங்கிள் என்று சொல்லிட்டேன். இப்ப டைரக்ஷ்னல கொஞ்சம் ஆர்வம் இருக்கு என்று அழகாக பேசி முடித்தார் அக்ஷ்ரா.
விஜயலெட்சுமி : டைரக்டர் அகத்தியனின் மகளான விஜயலெட்சுமி சென்னை 28, அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் தலைகாட்டினார். இப்போது இவர் தனது அக்கா கணவர் திரு டைரக்ஷ்னில், விஷால், த்ரிஷா நடித்து வரும் சமரன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
கீர்த்தனா : பார்த்திபன் மகளான கீர்த்தனா கன்னத்தில் முத்தமிட்டால் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு சினிமாவிற்காக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டார். சமீபத்தில் இவரை நடிக்க கேட்டு வாய்ப்பு வந்தும் கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். இப்போது மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற உள்ளாராம்., வாரிசுகளை இயக்குநர்களாக பார்க்கலாம் விரைவில்.
1 comments :
அருமையான தகவல் நண்பரே இன்று நம்ம தளத்தில்
சீனாவின் கடலாதிக்கம்
Post a Comment