Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, December 9, 2011

அமெரிக்க முதுகலை மாணவியின் தமிழக ஆசை

"ஏக்கமாக உள்ளது!' தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுகலை உழவியல் படிக்க வந்திருக்கும் அமெரிக்க மாணவி மேகன்: அமெரிக்காவின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் வசிக்கும், சிறு விவசாயக் குடும்பம் என்னுடையது. விவசாயம் தான் என் வருங்காலத்திற்கான விருப்பமாக இருந்ததால், "கர்னல்' வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தேன்.

தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன், "கர்னல்' பல்கலைக்கழகம் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, இரண்டு பல்கலைக்கழகங்களில் இருந்தும், 50 மாணவர்கள், 15 நாள் கல்விப் பயணமாக இடம் மாறினோம். அப்படி, இங்கு வந்து சென்றவர்களில், நானும் ஒருத்தி. இங்குள்ள விவசாயிகள், நிலத்தை உணவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகப் பார்க்காமல், மண்ணைத் தாயாக, போற்றியதையும், நுணுக்கமான இந்திய விவசாய முறைகளையும் பார்த்த போதே, தமிழக வேளாண்மைப் பல்கலையில், முதுகலை சேர வேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்னும் இரண்டாண்டுகளுக்கு கோவையில் தான் படிப்பு. நடவு, களை, அறுவடை என, விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு, ஆண்களுக்கு நிகராக உள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மை முறை, மனித குலத்திற்கு தீங்கு செய்யாததாக உள்ளது. அதன் சிறப்பான இயற்கை விவசாயம் குறித்து ஆராய்ச்சி செய்வது, என் அடுத்த திட்டம். உணவிற்குப் பதிலாக, வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதற்கு இணையானது தான், ரசாயனத்தில் விளையும் உணவுகள் அனைத்தும். ஆனால், அதுதான் எங்கள் நாட்டில் கிடைக்கும். இறக்குமதி செய்த, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை, பல நாட்கள் கழித்து வாங்கிச் சாப்பிடுவோம். காலையில், பறிக்கும் காய், கனிகளை மதிய உணவிற்குச் சமைத்துச் சாப்பிடும் உங்களைப் பார்க்கும் போது, ஏக்கமாக உள்ளது. இங்குள்ள இளைஞர்கள், அமெரிக்க கனவு காண்கின்றனர். ஆனால், எனக்கு இந்தியக் கனவு தான் உள்ளது.

அமெரிக்க ஆசையில் நாம்., இந்திய ஆசையில் அமெரிக்க மாணவி மேகன், எல்லா வளமும் இருந்து வெளிநாடு ஆசையில் நாம் இருக்குறோம். நெற்களஞ்சியமான தஞ்சை இப்போது கட்டட களஞ்சியமாக காட்சி அளிக்கிறது விலை நிலங்களில் கட்டடங்களும் சாயப்பட்டரையும் கட்டி நிலத்தை வினாக்கிவிட்டோம், இனி உணவுக்கு பதில் மாத்திரைகள்தான் உட்கொள்ளவேண்டும். சிந்திக்கட்டும். ஆட்சியாளர்கள்., மக்களும்.

Reactions:

1 comments :

என்ன செய்வது வெளி நாட்டவர்க்கு வந்த அறிவு நம் மக்களுக்கு எப்ப வருமோ ?

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!