வேலூர் மாவட்டத்தில், ஒரு மாதமாக மொபைலில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்து வருவது தெரிய வந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, "ப்ளஸ் 960' என்ற எண்களில் துவங்கும், 10 இலக்கம் கொண்ட நம்பரில் இருந்து மிஸ்டு கால் வருகிறது. வாடிக்கையாளர்கள் அந்த நம்பரை தொடர்பு கொண்டால், எதிர் முனையில் யாரும் பேசுவதில்லை. இணைப்பை துண்டிக்கும் போது, வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து, 40 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. பேலன்ஸை ஒரு சிலர் மட்டும் பார்ப்பதால், இது தெரியவில்லை.
இந்த மோசடியை அறியாத வாடிக்கையாளர்கள் பலர், மிஸ்டு கால்களை தொடர்பு கொண்டு, தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். குறிப்பாக, போஸ்ட் பெய்டு கணக்கில் இது போன்று நடப்பதில்லை. பெரும்பாலும், ப்ரீ பெய்டு கணக்கில் மட்டுமே இப்படி நடக்கிறது.
இது குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியது: இதுபோன்ற மோசடிகள் சமீபகாலமாக நடந்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மெசேஜ் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம் என்றார்.
0 comments :
Post a Comment