Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, December 16, 2011

அய்யரை (வால்) கொண்டு ஆடு (கடா) வெட்ட சொல்லும் பாரதிராஜா!!

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள அய்யனார் கோயிலில் பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துவக்க விழா இனிதே நடந்தது. படத்துவக்க விழா நிகழ்ச்சிக்கு கே.பாலச்சந்தர், மணிரத்னம்,வைரமுத்து உள்பட பல திரைக்கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், படக்குழுவினர் மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 30 வருடங்களாக பாரதிராஜாவின் பாதிப்பு இல்லாத இயக்குனர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. தென்னிந்தியா முழுக்க இதுதான் உண்மை என்று அழுத்தமாக சொன்னார் மணிரத்னம்.

அதன் பின் கவிஞர் வைரமுத்து பேசியதாவது, “ சினிமா உலகத்தின் மிகப்பெரிய பாகத்தை பாரதிராஜா இன்று எங்கள் ஊருக்கு கொண்டு வந்தது, அவர் செய்த மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்றாகும். 1976க்குப் பின் தமிழ் சினிமாவில் எந்த இயக்குனர் தலை தூக்கினாலும் அவர்களிடம் பாரதிராஜாவின் பாதிப்பு இருக்கும் என்று மணிரத்னம் கூறியது, ஒரு பல்கலைக்கழகமே அவருக்கு பட்டமளிப்பது போன்ற பெருமையை அளித்துவிட்டது. யாராக இருந்தாலும் கவிழ்த்துவிட்டு எதிர்நீச்சல் போடச் சொல்லி, கரையேறினால் உயர்த்திவிடுவது தமிழ் சினிமா. ஆனால் இங்கே 36 வருடமாக தனி இடத்தில் சிம்மாசனம் போட்டு உட்கர்ந்திருக்கிறார் பாரதிராஜா.

கலை,எழுத்து,கொண்டாட்டம் என்ற பெயரில் மக்களிடமிருந்து நிறைய சுரண்டி இருக்கிறோம். நம் காலத்திற்குள் இவர்களுக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என முடிவெடுத்து அறக்கட்டளை ஒன்றை தொடங்க இருக்கிறோம். வார்த்தையை கற்றுக்கொடுத்தது தமிழ், எங்களுக்கு வாழ்க்கையை கற்றுக் கொடுத்தது நீங்கள். உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம். அறக்கட்டளைக்கு என் பங்காக ஐந்து லட்ச ரூபாய் காசோலையை தருகிறேன். மேலும் இந்த படத்தின் மூலம் எனக்கு வர வேண்டிய சம்பளப்பணத்தையும் இந்த அறக்கட்டளைக்கே தருகிறேன். எனது நண்பர் கோவில்பட்டி நாகஜோதி அவர் பங்காக பத்து லட்ச ரூபாய் காசோலையை கொடுத்துள்ளார் என்று கூறி தன் உரையை முடித்தார்.

பாலசந்தரும் மணிரத்னமும் எனக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள். அய்யரைக் கூட்டி வந்து ஆடுவெடுகிற ஆள் நானாத்தான் இருப்பேன். வேற எங்கயாவது இவங்க இப்படி போனா ‘அவங்க’ விடுவாங்களா., பாலுமகேந்திரா நடந்து வரும்போது, அவரைத் தூக்கிக்கொண்டு வரலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் இந்த பூமியில் கால் பதிய வேண்டும் என்பதற்காக அதை செய்யவில்லை., இங்கு எனக்காக கூடியிருக்கும் அனைவருக்கும் நன்றி கூறி தன்னுடைய பேச்சை முடித்துகொண்டார் பாரதிராஜா.

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!