Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 24, 2012

உடலை கவனிக்காவிடில் உயிருக்கு அச்சுறுத்தல்! ஆய்வில்!!

லண்டன்: உடற்பயிற்சி இன்மையும் புகைப்பிடித்தல் போலவே உயிருக்கு அச்சுறுத்தல் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

புகைப்பிடித்தல் மற்றும் உடல் பருமனால் ஏற்படும் மரணங்களுக்கு சமமாக உடற்பயிற்சி குறைவும் உலகெங்கும் மக்களை கொல்வதாக மருத்துவ இதழான ‘த லான்செட்டில்’ வெளியான ஆய்வு அறிக்கை கூறுகிறது.

வாரத்திற்குக் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்டவேலை செய்வது போன்ற மிதமான உடற்பயிற்சிகளை செய்தால், 50 லட்சத்துக்கும் மேலானோர் இறப்பதைத் தவிர்க்கலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

இதய நோய், சர்க்கரை வியாதி, சில ரக கேன்சர் வியாதிகள் ஏற்படுவது ஆறிலிருந்து பத்து சதவீதமாகக் குறையும்.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 33 ஆராய்ச்சியாளர்கள் இணைந்த குழு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

உடற்பயிற்சியின்மை தற்பொழுது மிகப்பெரிய ஆரோக்கிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும், அரசுகள் அவசரமாக இவ்விவகாரத்தில் ஏதேனும் செய்யவேண்டும் என்றும் அறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

லண்டனில் ஒலிம்பிக்ஸ் நடைபெற உள்ள சூழலில் மக்களிடம் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

1 comments :

உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள்
Azhahi.Com

இப்படிக்கு
Azhahi.Com

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!