"டச் ஸ்கிரீன்' மொபைல் போன்களில், வக்கிர உணர்வைத் தூண்டும் விதமாக, ஆபாச விளையாட்டுகள் இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில், மொபைல் போன்கள், பட்டி தொட்டி வரை பரவ, சீன மொபைல்களே காரணம். நோகியா, சாம்சங், மோட்டரோலா உள்ளிட்ட மொபைல் போன் நிறுவனங்கள், ஒரு புதிய தயாரிப்பை உருவாக்கி, மார்க்கெட்டில் அறிமுகம் செய்தால், மறு வாரமே, அதே மாடல்களில், நெட், விளையாட்டுகள், இதர வசதிகளைக் கொண்ட, சீன மொபைல்கள் விற்பனைக்கு வந்து விடுகின்றன.
இந்நிறுவனங்களின் மொபைல் போன் ஒன்றின் விலை, 15 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் என்றால், அதே அளவு வசதியுடன் கூடிய, சீன மொபைல், வெறும், 1,000 ரூபாயில் துவங்கி, அதிகபட்சமாக, 5,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதிகப்படியான மாடல்கள், குறைந்த விலை என்பதால், இதையே மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்."கீ பேட்' இல்லாமல், "டச் ஸ்கிரீன்' மாடலில் மொபைல் போன்கள், விற்பனைக்கு வந்துள்ளன.
கம்பெனி தயாரிப்புகளைப் போல வசதியும், இளைஞர், சிறுவர்களைக் கவரும் வகையில், ஆபாச விளையாட்டுகளுடனும் விற்பனை செய்கின்றனர். பெண்களை இழிவுபடுத்தும் விதமான விளையாட்டுகள், இந்த போன்களில் உள்ளன.ஒரு பெண், முழுமையான ஆடையுடன் நிற்கும் படம் உள்ளது. "டச் ஸ்கிரீனில்' கை வைத்து சுரண்டினால், அப்பெண் போட்டுள்ள ஆடை, கொஞ்சம் கொஞ்சமாக உரிகிறது. ஒரு கட்டத்தில், "டூ பீஸ்' ஆடையுடன் பெண் இருப்பது போல படம் வருகிறது.மற்றொரு படத்தில், பெண் ஒருவர் நிற்கிறார். டச் ஸ்கிரீனில் இருந்து, நாம் காற்றை ஊதினால், அந்த பெண்ணின் ஆடை மேல் நோக்கி பறக்கிறது. வெட்கத்தில் அந்தப் பெண் கத்தும் சத்தத்தை மொபைல் வெளிப்படுத்துகிறது.
இது போன்று பல விளையாட்டுகளை, இணையதளத்தில் இருந்து, மொபைல் போனில், பதிவு இறக்கம் செய்து, விற்பனை செய்கின்றனர். கம்பெனி தயாரிப்புகளில், இது போன்ற ஆபாச விளையாட்டுகள் இல்லை; சீன போன்களில் மட்டுமே உள்ளது. கடைக்காரர்கள், வியாபார உத்திக்காக, இதுபோன்ற பதிவு இறக்கத்தை செய்துள்ளனர்.
தற்போது, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் காட்டுத் தீ போல பரவி, தங்களின் சாதாரண மொபைல்களைக் கொடுத்து, இது போன்ற, "டச் ஸ்கிரீன்' மொபைல்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். சைபர் கிரைம் போலீசார், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிபார்ப்பு?.
2 comments :
100௦௦% உண்மை... நல்லதொரு பதிவு...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
It is a curse of Science advancement. Nobody can help. If Children do not have moral values they have to pay for that heavily.
Post a Comment