Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, July 16, 2012

எதிர்ப்பை மீறி இந்தியா வருமா பாகிஸ்தான் அணி?

பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட அனுமதி அளித்த பிசிசிஐக்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவசேனாவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் கேப்டன் என்ற முறையில் கருத்து தெரிவிக்க கவாஸ்கருக்கு உரிமை உள்ளது என்று பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். சிவசேனா கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து கேட்டபோது, ‘பிசிசிஐ இந்த முடிவை எடுத்தபோது எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி உடனிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்வாக நிறைய பிரச்சினைகளை யார் வேண்டுமானாலும் எழுப்பலாம். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை காண்பதில் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இரு நாட்டு அரசியல் சூழ்நிலை ஸ்திரமற்றதாக இருக் கும் நிலையிலும், கிரிக்கெட் வாரியங்கள் மனப்பூ ர்வமாக இணைந்து செயல்படுகின்றன’ என்றார்.

பாகிஸ்தான் அணி வருகைக்குப் பிறகு இந்திய அணிபாகிஸ்தான் செல்லும் வாய்ப்பு பற்றி கேட்டதற்கு, பாகிஸ்தானில் பாதுகாப்பு திருப்தி அளிக்கும் பட்சத்தில் இருந்தால் கண்டிப்பாக இந்திய அணி அங்கு செல்லும், என்று சுக்லா தெரிவித்தார்.

பிசிசிஐ-ன் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ், இதன்மூலம் இந்திய-பாகிஸ்தான் உறவு வலுப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தான் மக்களும் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உலக கிரிக்கெட் அரங்கில் வலுவான அணியாக திகழும் இந்திய அணியுடன் விளையாடுவதால் பாகிஸ்தான் வீரர்களும் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும் என்றார் ஜாகீர் அப்பாஸ்.

# இந்தியா நடுநிலை நாடு என்றால் மதவாத மிரட்டலுக்கு அடிபணியாமல் கிரிக்கெட் விளையாட்டை நடத்தவேண்டும்., எல்லா எதிப்பையும் மீறி பாகிஸ்தான் அணி இந்தியா வருமானால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த சந்தோசமடைவார்கள் நடக்கும்மா அது காண கிடைக்குமா...?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!