கெய்ரோ: எவ்வித ஆவணங்களும் இல்லாமல் வருகை தரும் ஃபலஸ்தீன் மக்கள் எகிப்தில் நுழையவும், தங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திங்கள் கிழமை காலை முதலே ஏர்போர்ட்டுகளிலும், இதர இடங்களிலும் ஃபலஸ்தீன் மக்கள் விசா இல்லாமலேயே நுழைய துவங்கியுள்ளனர். கெய்ரோ ஏர்போர்டின் பாதுகாப்பு பிரிவு இத்தகவலை தெரிவித்துள்ளது.
வெறும் பாஸ்போர்ட் மட்டுமே பரிசோதித்து அதில் ஸ்டாம்ப் செய்யப்படுகிறது., விசா பிரச்சனையின் காரணமாக முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களும் புதிய சட்டத்தின் அடிப்படையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் கொடூர தாக்குதலால் மக்கள் தினம் ஃபலஸ்தீனை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்.
சொந்த மண்ணை விட்டு செல்ல என்ன தவறு செய்தார்கள் ஃபலஸ்தீனியர்கள், நாடு இல்லாமல் வந்தவர்களுக்கு (இஸ்ரேளிகளுக்கு)தங்க இடம் கொடுத்தது மட்டும்தான் இவர்கள் தவறு.
முன்பு இஸ்ரேல் என்கிற நாடே கிடையாது. 1963 முன்புள்ள உலக வரைபடத்தை பார்த்தவர்களுக்கு புரியும்.
0 comments :
Post a Comment