Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, July 25, 2012

கள்ளச்சாமிக்கு ஆதரவு அளிக்கும் ஆதினம்!

எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் மதுரை இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து அவரை மாற்றும் எண்ணம் எனக்கு இல்லை.

நித்யானந்தர் என்னை வசியப்படுத்தி விட்டதாகக் கூறுகிறார்கள். என்னை யாரும் வசியப்படுத்தவில்லை. யாராலும் வசியப்படுத்தவும் முடியாது. எனக்குத்தான் மற்றவர்களை வசியப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

இதையடுத்து, மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தர் செய்தியாளர்களிடம் கூறியது: ஆர்த்தி ராவின் குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய்யானவை. தனது மகனை மீட்டுத் தருமாறு மதுரை ஆட்சியரிடம் பெற்றோர் புகார் கொடுத்துள்ளது, அந்த பெற்றோருக்கும், மகனுக்கும் இடையே இருந்த பிரச்னை. அதை அவர்கள் பேசித் தீர்த்துக் கொண்டார்கள்.

பெங்களூரில் இம்மாதம் 30-ம் தேதி ஆண்மைப் பரிசோதனைக்கு ஆஜராகுமாறு போலீஸôர் எனக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். நான் கையிலாய யாத்திரைக்குச் செல்வது 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. எனவே, யாத்திரை முடிந்து வந்த பிறகு பரிசோதனைக்கு ஆஜராவதாக போலீஸில் மனு கொடுத்துள்ளோம்.

ஆதீன விதிமுறைகளை கடைப்பிடித்து, முறைப்படிதான் மதுரை ஆதீனமாக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். என்னை தேர்வு செய்ததில் எந்த முறைகேடும் இல்லை.

என் பெயரைப் பயன்படுத்தி யாரும் புதிய நிறுவனம், ஹோட்டல், டிராவல் ஏஜென்சி தொடங்கக் கூடாது என்று என் பக்தர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளேன் என்றார் நித்யானந்தர்.

ஆதினம் பணப் பெட்டியை பெற்றுக்கொண்டு விட்டாரோ என்கிறார்கள் கோயில் வட்டாரங்கள்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!