லண்டன்: ஆண் மற்றும் பெண்களிடம் கேட்கும் கேள்விகளையும், அதற்கு அவர்கள் பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் சரியான பதிலை அடிப்படையாக வைத்து லண்டனில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பெண்களின் அறிவு வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுவரை அறிவு வளர்ச்சியில் ஆண்களை விட 5 சதவீதம் பின்தங்கியிருந்த பெண்கள், தற்போது முன்னிலைக்கு வந்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன எனவும், மரபணுவையும் மீறி அறிவு வளர்ச்சியில் உயர முடியும் என்பதற்கு பெண்களின் இந்த வளர்ச்சியே உதாரணம் எனவும் அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
மேலும் இனி பெண்களிடம் அறிவு தொடர்பாக ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஆண் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment