லண்டன்: இந்தியர்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக விரதம் என்ற பெயரில் சாப்பிடாமல் இருப்பதுண்டு. அப்படி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் நடக்கிறதோ இல்லையோ, "நினைப்பு தவறாமல்' இருக்கும் என்கிறது லண்டனில் நடந்துள்ள மருத்துவ ஆய்வு.
அல்சமீர், பார்க்கின்சன் வியாதிகள் முதியோருக்கு வருவதைத் தடுப்பது எப்படி என்ற ஆராய்ச்சியின் போது இந்த விரத மகிமை டாக்டர்களுக்குத் தெரியவந்தது.
வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரு நாளோ உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவது இல்லை என்று தெரியவந்துள்ளது. சாப்பாடு அதிகம் இருந்தால் ஏராளமான கலோரி உடலுக்குள் செல்கிறது. அதை ஜீரணிக்க செரிமான உறுப்புகள்தான் உதவுகின்றன, மூளையை அது எப்படி வலுப்படுத்தும் என்று நீங்கள் கேட்கலாம்.
சாப்பிடாமல் இருக்கும்போது மூளையில் சுரக்கும் ஒரு திரவம் மூளையின் செயல்திறனைக் கூட்டுகிறதாம். இதனால் மூளைக்கு எந்தக் கேடும் வருவதில்லையாம். இதை முதலில் எலிகளிடத்திலிருந்து அறிந்தார்கள். பிறகு சில முதியவர்களிடமும் சோதித்ததில் உறுதி செய்துகொண்டார்கள்., அளவோடு உண்டு (நீங்காத) நினைவோடு வாழ்வோம். இது ஒரு ஒழுக்கப் பயிற்சிககளும் கூட, நாமும் இவ்விடயத்தை கடை பிடித்து மூளையை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைத்திருக்கலாமே.
1 comments :
Muslims are doing this for one month (Ramadhan) every year. Allah made this before 1000s of years and now scientists are analyzing the same. Allah "the great".
Post a Comment