Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 3, 2012

இல்லத்தரசிகள் இக்கொடுமைகளுக்கு ஆளாவதேன்?

புதுடெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒருமுறை தற்கொலை நிகழ்வதாக அரசு அறிக்கை கூறுகிறது. தற்கொலை செய்வோரில் ஐந்து பேரில் ஒருவர் இல்லத்தரசிகள் என்று அவ்வறிக்கை கூறுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்ட ’இந்தியாவில் விபத்து மரணங்களும், தற்கொலையும்(‘Accidental Deaths and Suicides in India 2011′) என்ற அறிக்கையில் இத்தகவல்கள் அடங்கியுள்ளன.

முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் தற்கொலை சதவீதம் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2010-ஆம் ஆண்டு 1,34,599 பேர் தற்கொலைச் செய்துள்ளனர். 2011-ஆம் ஆண்டு 1,35,585 ஆக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்குவங்காளம் தற்கொலையில் முதலிடத்தில் உள்ளது.

குடும்ப பிரச்சனைகள் காரணமாக தற்கொலையில் முதலிடத்தை ராஜஸ்தான் வகிக்கிறது. அடுத்த இடத்தை கேரளா பெற்றுள்ளது.

இதர மாநிலங்களில் கடந்த ஆண்டு தற்கொலைச் செய்துக் கொண்டோரின் எண்ணிக்கை:

தமிழ்நாடு – 15,963, மஹராஷ்ட்ரா – 15,947, ஆந்திரபிரதேசம் – 15,077, கர்நாடகா-12,622

மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் தற்கொலைச் செய்துக்கொண்டார் நாட்டின் மொத்தம் தற்கொலைச் செய்துக்கொண்டோரின் 56.2 சதவீதம் ஆகும்.

* இல்லத்தரசிலே! எந்த பிரச்சினை வந்தாலும் துணிவோடு எதிர்கொள்ளும் முடியவில்லையா உங்கள்மேல் அக்கறை உள்ளவர்களிடம் உங்கள் பிரச்சினைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். அவசரப்பட்டு எதையும் ஆராயாமல் செய்யாதீர்,ப்ளீஸ்.

1 comments :

வேலை செய்யாமல் வீடுகளில் இருப்பதும் மனநோயினை ஏற்படுத்த வாய்ப்புண்டு, இது அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கும், அத்தோடு தொலைக் காட்சிகள் மேலும் மனநோயினை அதிகரிக்கச் செய்கின்றது ... வீடுகளில் இருந்தாலும் கூட சிறு தொழில் போன்றவற்றில் ஈடுபடலாம் .... !!!

தற்கொலைத் தடுப்பு மையம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமாகும் ..

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!