Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, July 13, 2012

பொருளாதாரமோ தளர்ச்சி! அரசியல் கட்சிகளோ அபார வளர்ச்சி??

புதுடெல்லி: இந்திய தேசம் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைந்துள்ள சூழலில் முன்னணி அரசியல் கட்சிகளின் கஜானா நிரம்பி வருகிறது. ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்ற தொகை 1,662 கோடி ரூபாய். முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.கவுக்கு 852 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

த அசோசியேசன் ஃபார் டெமோக்ரெடிக் ரிஃபார்ம் என்ற அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு கட்சிகளுக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்துள்ளது. 2008-09 ஆண்டு காலக்கட்டத்தில் 220 கோடி ரூபாயாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருமானம் அடுத்த ஆண்டு 497 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பா.ஜ.கவுக்கு 124 கோடி ருபாயில் இருந்து 220 கோடி ரூபாயாக வருமானம் உயர்ந்தது.

கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு 307 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்தபொழுது பா.ஜ.கவுக்கு 168 கோடி ரூபாய் கிடைத்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ்கட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் 425 கோடி ரூபாயை வருமானமாக பெற்றுள்ளது. 335 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4-வது இடத்தில் உள்ளது. 5-வது இடத்தில் சமாஜ்வாதிக் கட்சியும்(220கோடி), 6-வது இடத்தில் தேசிய வாத காங்கிரஸ்(என்.சி.பி) கட்சியும் (140 கோடி)உள்ளன.

அதேவேளையில் தங்களுக்கு வருமானம் வந்த வழிகளைக் குறித்து இக்கட்சிகள் வருமான வரித்துறைக்கு அளித்துள்ள ஆவணங்களில் குறிப்பிடவில்லை. இதுத்தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி த அசோசியேசன் ஃபார் டெமோக்ரேடிக் ரிஃபார்ம் அமைப்பு வருமான வரித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!