Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, July 29, 2012

ஆரோக்கியமானது பாப்கா(ர்)ன்! விஞ்ஞான தகவல்!!

சினிமா தியேட்டருக்கோ அல்லது பொது இடங்களுக்கோ செல்லும் போது, அங்கு விற்கும் பாப்கானை வாங்கி சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது. பாப்கான் நமக்கு நெருக்கமான பொருளாகி விட்டது.

இதை கொரிக்க கூடிய ஒரு உணவாக மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் பாப்கானை சத்து நிறைந்த சீர்படுத்தப்படாத தங்கம் என்று வர்ணிக்கின்றனர்.

பென்சில் வேனியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி தலைமையில் தானியங்களில் காணப்படும் சத்துக்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கான் மிகவும் சத்தானது என்று கண்டு பிடித்துள்ளனர்.

உப்பு, எண்ணை, வெண்ணெய் போன்றவை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பாப்கான், காய்கறி, பழங்களைவிட சத்தானது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

பாப்கான் பற்களுக்கும் மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் சிறந்த நொறுங்கு தீனியாகும். மற்ற தானியங்களில் உள்ளதை விட மக்காசோளத்தில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் நார்சத்து அடங்கி இருப்பதால், பாப்கான் சத்தானது மட்டுமின்றி உடல் நலத்துக்கும் நல்லது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!