Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, July 27, 2012

பற்றி எரிவதை பார்த்துக்கொண்டு இருக்கும் மத்திய மாநில அரசுகள்?

புதுடெல்லி: அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வகுப்புவாத கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் தருண் கோகோய் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றும், நீதி விசாரணை நடத்தவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடு, பணமும் இழந்தவர்களுக்கு அவசர நிவாரண உதவி வழங்கவேண்டும். பல்லாயிரக்கணக்கானோர் கலவரத்திற்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களது புனர்வாழ்வுக்கான பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் கோகோய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டீஸ்டா ஸெடல்வாட், ஜாவேத் ஆனந்த், டாக்டர்.அஸ்கர் அலி எஞ்சீனியர், ராம்புன்யானி, இர்ஃபான் எஞ்சீனியர், ஸஃபர் ஆகா, ராஜேந்திர பிரசாத்(ஸஹ்மத்), ஹஸன் கமால் ஆகியோர் அஸ்ஸாம் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த கலவரம் பற்றி மனித ஆர்வலர் கூறும்போது: இது திட்டமிட்ட சதி முன்பு குஜராத்தில் மோடி செய்ததுபோல் இம்மாநில முதல்வர் அவசரகால நடவடிக்கை செய்ய தவறவிட்டார் அல்லது கண்டும் காணாததுபோல் இருந்து விட்டார் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!