அஹ்மதாபாத்: குஜராத் மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க முதல்வரும், முன்னணி தலைவர்களில் ஒருவருமான கேசுபாய் பட்டேல், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியை சராமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.
பா.ஜ.க வின் முன்னணி அமைப்பு ஒன்று நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு அவர் கூறியது:
“உங்களுக்கு தெரியும், இங்கு ஒருவர் பொய் பேசுவதில் ஏகாதிபத்தியவாதியாக திகழ்கிறார் என்பது. ‘ஸத்பாவனா மிஷன்’ என்ற பெயரில் மோடி மக்களுக்கு சேவைபுரிய திட்டம் ஒன்றை துவக்கினார். ஆனால், உண்மையில் என்ன நடந்தது? என்பதை தாமதிக்காமல் அனைவரும் கண்டுகொண்டனர்., மேலும் சிறுபான்மையினர் பயத்ததுடன் வாழும் முதல் மாநிலம் இந்தியாவிலே குஜராத்தான் என்றார்.
இதர சமூகத்தினருக்கு கொடுமை இழைக்கவும், அவர்களுடன் சகிப்புத் தன்மையற்ற முறையில் பழகவுமே இத்திட்டம் உபயோகமானது.
சிறந்த நிர்வாகம் என்பது அன்பு மற்றும் அச்சமில்லாத சூழலாகும். ஆனால், எதிர்பாராதவிதமாக இன்று குஜராத்தில் அன்பு என்பது காணாமல் போய்விட்டது. மக்கள் பயத்தில் வாழ்கின்றனர். இதே ரீதியில் சென்றால் அடுத்த தேர்தலில் பலன் மாற்றமாக இருக்கும்.
பா.ஜ.க உறுப்பினர் பதவியை புதுப்பிக்க மாட்டேன். அடுத்த தேர்தலில் 3-வது அணியை உருவாக்குவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளேன்.” என்று கேசுபாய் கூறினார்.
“குஜராத்தில் மக்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. 6 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைச் செய்துள்ளனர். ஃபெஸ்டிவெல்கள்(திருவிழாக்கள்) நடத்தி மக்களை மயக்கி அவர்களை எதிர்க்கும் வலுவில்லாதவர்களாக மோடி மாற்றி வருகிறார்” என்று இன்னொரு முன்னாள் முதல்வரும், பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவருமான சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment