வங்கியில் பணம் எடுப்போரை கவனித்து, அவர்களை பல்வேறு வழிகளில் ஏமாற்றி, பணத்தை பறித்துச் செல்லும் கும்பல், எல்லா இடங்களிலும் உள்ளது.
சில நூறு ரூபாய்களை கீழே போட்டு, ஏமாற்றுவது, பணம் வைத்திருப்போர் சட்டையில் எச்சிலை துப்பி, அதை கூறி, சம்பந்தப்பட்ட நபர் துடைக்கும் போது பணத்தை பறித்துச் செல்வது, சைக்கிள், பைக் சக்கரங்களில் கயிறை சுற்றி வைத்து, அதை எடுக்கும் போது பணப்பையை பறிப்பது என, பல கைவரிசைகளை காட்டி, திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் பணத்தை பறித்துச் செல்கின்றனர். ஒரு சில ரூபாய்களுக்காக, பல ஆயிரங்களை இழப்போர் அதிகம். இந்த வகையில், முதியவர் ஒருவர் மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டுள்ளார்.
காரியமங்களம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன்,60. நேற்று உத்திரமேரூரில் உள்ள கனரா வங்கியில், ஏழு சவரன் தங்க நகைகளை அடமானம் வைத்து, 70 ஆயிரம் ரூபாய் வாங்கினார். பணத்தை ஒரு துணிப் பையில் வைத்துக் கொண்டு, சைக்கிளில் வீட்டிற்குச் சென்றார்.
தனியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த, மர்ம நபர்கள் இருவர், 500 ரூபாய் நோட்டை காற்றில் பறக்க விட்டு, கணேசனிடம் காற்றில் பணம் பறக்கிறது என்றனர். இதை கேட்டதும், கணேசன் சைக்கிளை நிறுத்திவிட்டு, பணப்பையை அதில் வைத்துவிட்டு, 500 ரூபாயை எடுக்க வேகமாகச் சென்றார். அப்போது, சைக்கிளில் மாட்டியிருந்த பணப்பையை மர்ம நபர்கள் எடுத்துக் கொண்டு தப்பினர்.
0 comments :
Post a Comment