தமிழகத்தில் இன்று ஹாட் டாபிக் பவர் கட், நாயை குளுப்பாட்டி நாடு வீட்டில்
வைத்தாலும் அது என்னத்தையோ கிளப்பிக்கிட்டு அதை துன்னதான் போகும்
என்பார்கள்.
வேலை தேடி வந்தவருக்கு (படத்தில் நடிக்க) ஒட்டு போட்டால் அவர்
தன் புத்தியைத்தான் காண்பிக்கிறார். அந்தவகையில் தமிழகத்துக்கு கிடைத்த
தரித்திரியம் பாசிச ஜெயா செய்யும் அடாவடி அரசியலும், கூடங்குளத்திற்கு வலு
சேர்ப்பதற்காக பாசிச புத்தியை கையாளுகிறார். மின் வெட்டை அதிகமாக்கி
மக்களை தவிக்கவைத்து கூடன்குள அணு மின் நிலையம் வேண்டும் என நியாயப்படுத்த
பார்ப்பனிய தந்திர புத்தியை கையாளுகிறார்.
ஒருமணி நேரத்திற்கொருமுறை பவர் கட் என்பதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலவரம். (நாடுவிட்டு நாடு வந்தவர்). நாளொன்றுக்கு 12 மணி நேரத்திற்கும் குறையாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது தமிழகம். பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களையும் வாட்டி வதைக்கும் ஜெ. அரசின் இந்த துன்பச் சாதனைக்கு எதிராக மக்கள் கிளர்ந் தெழுந்துப் போராடுவதைப் பல ஊர்களிலும் காண முடிகிறது.
அரசியல் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்காமல், அந்தந்த பகுதியில் உள்ள மக்களும் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கோஷங்களிலும் கோப வார்த்தை களிலும் ஜெ.அரசு வறுத்தெடுக்கப்படுகிறது. "கரண்ட்டு தர முடியாத கையாலாகாத அரசு' என்று வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள் மக்கள்.
அவர்களின் பாதிப்பை தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேரில் காண முடிந்தது. டாலர்களில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தொழில்நகரங் களான கோவை, திருப்பூர் பகுதிகளில் தற்போது நாள்தோறும் 16 மணி நேரம் பவர் கட். அதனால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட, 8 லட்சத்திற்கும் அதிகமானத் தொழிலாளர்கள் நடுரோட்டில் நிற்கிறார்கள். பொது மக்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி யுள்ளனர்.
பவுண்டரி நடத்தும் ரங்கராஜன், "நான் காஸ்டிங் ஜாப் ஆர்டர் எடுத்துட்டுப்பண்ணிட்டிருக்கேன். என்கிட்ட 20 பேர் வேலை செய்றாங்க. ஒரு மாசத்துல மட்டும் 60 டன் காஸ்டிங் டெலிவரி கொடுத்துக்கிட்டிருந்தேன். உற்பத்தி செலவு போக மாசம் 60ஆயிரம் ரூபாய் நிற்கும். இப்போது கரண்ட் கட்டால மாசம் 40ஆயிரம் லாஸ் ஆகுது.
தொழிலாளர்களும் 500, 600ன்னு சம்பாதிச்சிக்கிட்டிருக்காங்க. இப்ப எப்ப கரண்ட்டு வரும்னு 12 மணி நேரம் காத்திருந்து, ஒரு மூணு மணி நேரம் வேலை செஞ்சி 150 ரூபாய் சம்பாதிக்கிறாங்க.. அவங்களால எப்படி குடும்பத்தைக் காப்பாத்த முடியும்? இப்படித் தினமும் கரண்ட்டை கட் பண்றதுக்கு, வாரத்தில் மூணு நாள் முழுசா கரண்ட்டைக் கட் பண்ணி, தொழிற்சாலைகளுக்கு லீவு விட்டுட்டு, மீதி நாலு நாள் கரண்ட் சப்ளை பண்ணி முழுசா வேலை பார்க்க அனுமதிச்சா முதலாளி-தொழிலாளி இரண்டு பேருக்குமே நல்லது'' என்கிறார்.
1 comments :
நன்பா...ஆனாலும் உங்களுக்கு துணிச்சல் தான்...அராஜக அரசை விமர்சிக்கும் தைரியத்தை நான் பாராட்டுகிறேன்...அல்லாஹ்...!! உங்களுக்கு மேலும் மெலும் அருள் புரியட்டும்...பணி தொடர உதவிசெய்யட்டும்..
Post a Comment