சென்னை: இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் கொந்தளித்துப் போனது. பல்வேறு நாடுகளில்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் தென்கோடி பகுதியான தமிழகத்திலும் தினந்தோறும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது.
இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் முன் இன்று 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க துணை தூதரகம் 3 நாட்களுக்கு மூடப்பட்டது. மேலும், தூதரகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டது. மேலும் அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு அண்ணா சாலை தர்கா அருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அண்ணா சாலையில் இதுவரை எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டதில்லை. மேலும் போராட்டத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் மாலை 3 மணி முதலே போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
அண்ணா சாலை முழுவதும் இஸ்லாமியர்கள் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே அமெரிக்க தேசியக் கொடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் அண்ணா சாலை தர்கா அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அமெரிக்காவுக்கு எதிராக கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர்.
உலக மக்கள் அனைவருக்கும் உன்னத தத்துவங்களை போதித்த இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் இந்த திரைப்படம் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தியிருப்பதால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும், இந்தியா தனது கண்டனத்தை பதிவுச் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வற்புறுத்தினர்.
20க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அங்கு குவிந்ததால் அண்ணா சாலை வரலாறு காணாத அளவுக்கு ஸ்தம்பித்தது.
இப்போராட்டத்தால் மயிலாப்பூர், ராயப்பேட்டை , அண்ணாசாலை ஆகிய தென்சென்னை பகுதிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன. மேலும் மத்திய சென்னை பகுதிகளான எழும்பூர், சிந்ததாரிப் பேட்டை வழியே பேருந்துகள் திருப்பிவிடப்பட்டதால் அந்தப் பக்கமும் வாகனங்களால் நிலைகுலைந்து போனது. சென்னையில் பல மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.(இதில் முக்கிய விடயம் என்னவென்றால் எந்த பார்ப்பன ஊடகங்களும் இச்செய்தியை வெளியிடவில்லை,.தின மலம் மா(மூ)த்திரம் சிறிய கொசுறு செய்தி வெளியிட்டது.)
6 comments :
வருத்தமான செய்தி...உங்கள் பகிர்வுக்கு நன்றி...
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
nalla pakirvu mikka nantri!
வெகு ஜண ஊடகம் தரும் செய்திகளை முஸ்லிம்கள் கண்டு கொள்வது இல்லை. உங்களை போல் நடுநிலையாளர்கள் தரும் செய்திகளை புறந்தள்ளுவதும் இல்லை தொடரட்டும் உங்கள் பனி வாழ்த்துகிறேன்.
அமெரிக்காவில் உள்ளோர் அனைவரும் கெட்ட மனம் கொண்டவர் அல்லர் . அடைக்கலம் தேடி வந்தவருக்கு உதவி செய்ய ஆட்சியே மறைமுகமாக அவர்கள் கையில் சிக்கிப் போனதுதான் வேதனை. உலகமெல்லாம் ஒடுக்கப்பட்ட யூதர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கிடைத்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் நாட்டின் குடியுரிமை கிடைத்தது. ஊடுருவிய புல்லுரிவிகள் தன் குணத்தை மாற்றாமல் மறைமுகமாக அமெரிக்காவின் ஆதிக்கத்தையே தன் வசம் கொண்டு வந்து விட்டனர்.உலகில் உள்ள யூதர்களில் 75% விழுக்காடு அமெரிக்காவில் உள்ளனர்.அவர்கள் உலகத்தையே தன் வசம் ஆக்கிக் கொள்ள திட்டம் தீட்டுகின்றனர். அதற்கு முதல்படியாக மற்ற மக்களுக்கிடையே குழப்பம் உண்டாக்குவது மற்றும் நாடுகளை பிரிப்பது இதற்கு பெயர் உரிமைப் போர்.
பயனுள்ள பதிவு.....
EllameyTamil.com
ella padaippugalum vegu arumai good
Post a Comment