Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, September 6, 2012

"தீ" பாவ(லி)ளி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் இன்று பிற்கபல்நிகழ்ந்த கோர தீ விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கருகி உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த தீவிபத்து.

ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக சிவகாசி சுற்றுவட்டாரத்தில் இத்தகைய தீ விபத்துகள் நடப்பதும் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கருகிப்பலியாவதும் வாடிக்கையாகிவருகிறது.

எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இல்லாமல், அபாயகரமான வெடி மருந்துகளைக் கையாண்டிருப்பதே அசம்பாவிதத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இனியாவது இப்படி மனித உயிர்கள் கருகிப்பலியாவதைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பட்டாசு ஆலைகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருப்பதும் இதை அரசுஅதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும்தான் தீ விபத்துக்குக் காரணம். இத்தகைய தீ விபத்துக்கு என்ன காரணம் என்பதை கண்டறிவதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் பட்டாசு ஆலை நிர்வாகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இத்தகைய தீ விபத்து நிகழும்போது உரிய சிகிச்சை பெற அங்குபோதுமான மருத்துவவசதி இல்லை. ஏற்கெனவே விருதுநகரில் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கூட அறிவிப்போடுதான் இருக்கிறது. அங்கு இனியாவது நவீனவசதிகளுடன் கூடிய மருத்துவமனையை விரைந்து அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த துயர சம்பவத்துக்கு பிறகாவது மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கையில் இறங்குமா அல்லது தன் பையை நிரப்பிக்கொண்டு ஒதுங்குமா ..?

1 comments :

பகிர்வுக்கு நன்றி. அரசு கண் துடைபபாக விசர்ரனை செய்யமால் இதை முழுமையாக தடை செய்யவேண்டும் , இல்லையேல் உரிய பாதுகாப்புடன் இதைச் செய்யாத பட்டாசு ஆலைகளில் லைசென்சை முளுமையாக ரத்து செய்யவேண்டும்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!