பல வெற்றி படங்களில் நடித்து கிடைத்த பெயர், புகழ் எல்லாவற்றையும் காட்டிலும் சத்யமேவ ஜெயதே எனும் ஒரே ஒரு நிகழ்ச்சி அமீர்கானை எங்கோ கொண்டு போய் சென்றுவிட்டது.
தனியார் டி.வி. ஒன்றில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நடிகர் அமீர்கான். சமூகப் பிரச்னைகளை அலசி, ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் இடையே பெரிதும் வரவேற்பு பெற்றது. இதன்தொடர்ச்சி 2ம் பாகமும் வரவேண்டும் என்றும், அதில் அமீர்கானே வரவேண்டும் என்று ரசிகர்களும் பலரும் விரும்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இப்போது அமெரிக்கா வரை பிரபலமாகியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான டைம் பத்திரிக்கையில் இந்நிகழ்ச்சி பற்றிய கட்டுரை வந்துள்ளது. அது மட்டுமி்ன்றி அட்டைப்படத்தில் ஆமீர் கானின் போட்டோவைப் போட்டுள்ளனர். இதன் மூலம் டைம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் வந்த முதல் இந்திய ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அமீர்.
முன்னதாக இதற்கு முன் முன்னாள் பிரதமர் இந்திரா, ராஜீவ், தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பர்வின் பாபி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சானியா மிர்சா ஆகியோரது படங்கள் டைம் பத்திரிகையின் அட்டைப்பக்கத்தில் வந்துள்ளது.
0 comments :
Post a Comment