Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, September 29, 2012

சிக்கு புக்குவில் சிக்கும் எதிர்கால மாண(னை)விகள்!!

ஆடலுடன் பாடலைக்கேக்க சுகம் சுகம் இது பாட்டு அதே போன்று பிஞ்சுக்களின் எண்ணமும் நச்சத்திர ஹோட்டல்களில் மதுக்கூடங்களில் பாடல்களுடன். 'பப்பு'களில் "டிஸ்கொ'வாக. (இன்று மாணவி நாளை ஒருத்தருக்கு மனைவியாக போகிறவள்)

தலைநகரில் பதினெட்டைத் தொடாத சிறுவர்கள் மதுக்கோப்பைகளுடன் ஆ(கூ)டல் அழகியருடன் மயங்கி சரிந்து சீரழியும் காட்சிகளை இந்த இடங்களில் அன்றாடம் காண முடிகிறது.

சென்னை எழும்பூர் ஸ்டார் ஓட்டலில் ப்ளஸ்-டூ படிக்கும் மாணவர்கள் சிலர் உடன்படிக்கும் மாணவிகளோடு வந்து மதுபோதையில் குத்தாட்டம் போட்டு அதன் உச்சகட்டமாக தாக்குதலில் ஈடுபட்டது லேட்டஸ்ட் அவலம். மற்ற இடங்களில் உள்ள ஓட்டல்களில் நிலவரம் எப்படி? விசாரித்தோம்.

மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல்கள் அந்தந்த அடையாளத்துடன் அழைக்கப் பட அதற்கு கீழுள்ளவைகள் வெறுமனே நட்சத்திர ஓட்டல்கள் என்ற அடையாளத்துடன் ஜொலிக்கின்றன.

இது தவிர பண்ணை வீடுகள், "பொட்டீக்' என்ற பெயரில் அழைக்கப்படும் சிறு சிறு சொகுசு குத்தாட்ட விடுதிகள், "பார்'களுடன் நடனமிடும் "பப்'பு வகைகள் என்று சீரழிவுக்கு பல முகங்கள் கணக்கில் காட்டப்படுகின்றன.

முதலில் "பப்'புகள் பற்றி விசாரித்தோம். சனி, ஞாயிறுகளில் "பப்'பே கதியாக கிடந்து பொருளாதார ரீதியாக சுருண்டிருக்கும் கோபி என்ற இளைஞர் நம்மிடம், ""கிழக்கு கடற்கரைச் சாலையில் கண்ணுக்குத் தெரிகிற அளவில் 36 "பப்'புகள் உள்ளன. தெரியாதவை நிறைய... பார் லைசென்ஸை மட்டுமே வாங்கிக் கொண்டு நடனம், சூதாட்டம் என அத்தனை அம்சங்களையும் இங்கே செய்து கொண்டி ருக்கிறார்கள். மற்ற நாட்களில் எப்படியோ தெரியாது. சனி, ஞாயிறுகளில் இரவு 7 மணிக்கு நான் உள்பட குறைந்தபட்சம் நூறு பேராவது "பப்'புகளில் டான்ஸ் ஆடுவோம் என்றார் மப்பில் இல்லை இல்லை பப்பில்.

Reactions:

2 comments :

ஆணுக்குப் பெண் சமம், அனைத்திலும்!

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!