Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, September 23, 2012

இரவல் கொடுக்கும் முன் இரகசியத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்?

கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் சொசைட்டி கோவை கிளை அமைப்பு தலைவர் எஸ்.என். ரவிச்சந்திரன் மாணவ-மாணவிகளிடையே கணினி தொடர்பான விஷயங்களில் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை அம்சங்கள் குறித்து விளக்கினார்.

சமூக வலைத் தளங்களை கையாளும்போது அதிக கவனமும், முன்னெச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும். அந்தரங்க தகவல்களை கணினி, மொபைல், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை தவிர்க்க வேண்டும். கணினி, கைப்பேசிகளை யாரிடமும் இரவல் தருவது நல்லதல்ல. வலைத்தளத்தில் பதிவாவது எதுவுமே அழியாது.

உங்களுடைய பிறந்த தேதி, உங்கள் தாயார் பிறந்த தேதி இரண்டு இருந்தாலே போதும், உங்களுடைய ஏ.டி.எம். கணக்கு, கடன் அட்டைச் செயல்பாடு ஆகியவற்றை தவறான வழியில் சமூக விரோதிகள் பயன்படுத்தவோ, முடக்கவோ முடியும். அறிமுகமில்லாத குறுந்தகவல்கள், மெயில்களுக்கு நீங்கள் பதிலளிக்கவோ, திறந்து பார்க்கவோ செய்வது ஆபத்தில் முடியும். கணினியில் எண்டர் எனும் பொத்தான் தான் படுபயங்கரமானது.

புத்தி நுட்பத்தோடும், எச்சரிக்கையோடும் எண்டர் பட்டனை கையாள வேண்டும் என்றார்.,மேற் சொன்னவைகளில் அதிக கவனமாக இருந்து உங்கள் தகவல்களை பாதுகாத்துக்கொளுங்கள்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!