தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப்-டாப், டேப்லெட் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களால், இணைய தள பயன்பாடு அதிகரித்துள்ளது.
மக்கள், தாங்கள் விரும்பும் பொருட்களை, இணையதளம் வழியாக, "கிரெடிட்' மற்றும் "டெபிட்' அட்டைகளை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே வாங்க முடிகிறது. குண்டூசி முதல் குக்கர் வரை,வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும், இணையதளத்தின் மூலம் வாங்கும் வசதி உள்ளதால், இல்லத்தர சிகளிடையே, இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இ-பே இந்தியா, ஜங்லீ டாட் காம், ஜபாங் டாட் காம், மிந்த்ரா டாட் காம் என, நூற்றுக் கணக்கான நிறுவனங்கள், இணையதளத்தில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.பாரம்பரிய கடைகளை விட, இணைய தளத்தில் பல பொருட்களின் விலை குறைவாக உள்ளது. இதனால், கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கு வோரின் பார்வை, தற்போது, இணையதள கடைகளின் பக்கம் திரும்பி வருகிறது. நேரம், அலைச்சல், செலவு மிச்சம் என்பதால், இணையதள வர்த்தகச் சந்தையை நாடுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
தள்ளுபடி:ஆசிய பசிபிக் நாடுகளை பொறுத்தவரை, இந்தியாவில் இணையதளம் வாயிலாக பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்து வருகிறது.
இணையதளத்தில்,நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் பல நிறுவனங்கள், சென்ற ஆண்டு தீபாவளிக்கு, 10-15 சதவீதம் முதல், 80-90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கியதுடன், பரிசு கூப்பன், இலவச வினியோகம், பரிசுப் பொருட்கள் உள்ளிட் டவற்றை வழங்கின.
இதுபோன்ற காரணங்களால், சென்ற 2011ம் ஆண்டில், 1.25 கோடி வாடிக்கையாளர்கள், இணையதளம் வாயி லாக, 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்முதல் செய்துள்ளதாக, மதிப்பிடப்பட்டுள்ளது. தற் போது, இந்தியாவில்,இணையதள வர்த்தக சந்தையின் மதிப்பு,6,000 கோடி ரூபாய் என,மதிப்பிடப் பட்டுள்ளது.
தீபாவளி:இச்சந்தை மதிப்பு, ஆண்டுக்கு250 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. நாடு தழுவிய அளவில், 12 கோடிக்கும் அதிகமானோர், இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இதில், பாதிக்கும் மேற்பட் டோர், இணையம் மூலம் பொருட்களை கொள்முதல் செய்கின்றனர்.
சென்ற ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, இணையதளம் மூலம் பொருட்களை வாங்கியோரில், வெளி நாடு வாழ் இந்தியரின் பங்களிப்பு, 40-50 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, வரும் தீபாவளிக்கு, 85 சத வீதமாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
2 comments :
* தமிழ் மணத்தில் இன்றைய கேவலமான தனி நபர் தாக்குதல்!
* தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!
* இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!
* தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!
அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவரி. tamilnaaththam@gamil.com
* தமிழ் மணத்தில் இன்றைய கேவலமான தனி நபர் தாக்குதல்!
* தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!
* இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!
* தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!
அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவரி. tamilnaaththam@gamil.com
please go to visit: http://www.tamilnaththam.blogspot.com/
Post a Comment