Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, September 13, 2012

கொந்தளிக்கும் தமிழக மக்களுக்கு தீர்வுதான் எப்போது?

இன்று தமிழக முழுவதும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த மின் தடை. இந்த மின் தடையால் விவசாயிகள், மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த சில வாரமாக காலை 6 மணி முதல் 9 மணி வரையும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அதிகாலை ஒரு மணி நேரமும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளது. நெசவாளர்கள் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அரிசி ஆலையில் அரவை நடக்கவில்லை.

பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர். வசதி படைத்த சிலர், டீசல் இன்ஜின் மூலம் தண்ணீர் பாய்ச்சி ஓரளவு பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

இந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 10, 12ம் வகுப்பு பொது தேர்வுக்கு படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சிம்னி விளக்கு ஏற்றிவைத்து அந்த வெளிச்சத்தில் படிக்கின்றனர். ரயில் நிலையங்களில் கம்ப்யூட்டர் செயல்படவில்லை. இதனால் சீசன் டிக்கெட் வாங்க வரிசையில் பயணிகள் காத்து இருக்கின்றனர். அன்றாட டிக்கெட் கொடுப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மின்வாரியத்துக்கு மக்கள் பலமுறை புகார் தெரிவித்துவிட்டனர். மின் தட்டுப்பாடு நிலவுவதால் நாங்கள் என்ன செய்ய முடியும்? என அதிகாரிகள் கைவிரிப்பதாக பொது மக்கள் கூறுகின்றனர்.

இது போல பல நகரங்களிலும் மின் தடை ஏற்படுகிறது. இந்த மின் தடையால் மாணவர்கள் அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இருளில் சிக்கித் தவிக்கும் தமிழகதிற்கு தீர்வு எப்போது? என்பதே ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பு!

Reactions:

3 comments :

வந்தேறி ஜெயா வந்தாலும் வந்தார் தமிழகம் இருளில் மூழ்கியது s.அரசன்.

ஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணமா!!! திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,

இன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.

என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா? இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,

தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.

ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.

தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaththam@gamil.com

please visit: www.tamilnaththam.blogspot.com

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!