Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, September 15, 2012

எதிர்ப்பு வலுக்கும் இத் (தீவிர) ரைப்படத்தின் மர்ம முடிச்சு?

வாஷிங்டன்: இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னமும் அவிழவில்லை.

கலிஃபோர்னியாவில் வசிக்கும் இஸ்ரேல் வம்சாவழியைச் சார்ந்த ஸாம் பசிலி என்பவன் தாம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளதாகவும், கிறிஸ்தவ-யூத அமைப்புகளின் உதவியுடன் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் முன்னர் செய்திகள் வெளிவந்தன.

இஸ்லாம் ஓர் புற்றுநோய் என்றும், முஹம்மது நபியை மோசமாக சித்தரித்தும் பசிலி ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் பசிலி என்பவன் போலி என்றும், இது ஒரு போலியான தகவல் என்றும் கூறி இத்திரைப்படத்தின் கன்ஸல்டண்ட் என கூறும் ஸ்டீவ் க்ளீன் என்பவர் AFP செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பசிலி தலைமறைவாகிவிட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகின.ஆனால், இது தொடர்பாக எ.எஃப்.பி செய்தியாளர்கள் நடத்திய விசாரணையில் பசிலி என்பவர் கலிஃபோர்னியாவைச் சார்ந்த காப்டிக் கிறிஸ்தவர் என்பது தெரியவந்துள்ளது. நகவ்லா பசிலி நகவ்லா என்ற 55 வயதான நபருக்கு, பசிலியைக் குறித்து முதலில் வெளியான தகவல்களுக்கும் பொருத்தம் இருப்பதாக எ.எஃப்.பி கூறுகிறது. ஆனால், பசிலி என்ற பெயரில் தான் தன்னை அறிமுகப்படுத்தவில்லை என்று நகவ்லா கூறுகிறான்.

நகவ்லா பசிலி மீது ஏற்கனவே போலி பெயர்களில் மோசடி நடத்தியது தொடர்பாக வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இறைத்தூதரை அவமதிக்கும் ‘innocence muslims’ என்ற திரைப்படம் 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளியானது. ஆனால், எகிப்தில் ஒரு காப்டிக் கிறிஸ்தவ விஷமி ஒருவன், இத்திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய 13 நிமிடங்கள் ஓடும் வீடியோவை அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து யூ ட்யூபில் பதிவு ஏற்ற்றம் செய்துள்ளான். இதனைத்தொடர்ந்து எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பெரும் கொந்தளிப்பு அடைந்தனர். தொடர்ந்து அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. யூத லாபிதான் இத்திரைப்படத்தின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் ஃப்ளோரிடாவைச் சார்ந்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதி டெர்ரி ஜோன்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்த நபருடன் நெருங்கிய தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் ஒரு சதித்திட்டம் என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகின்றனர். இதனிடையே, திரைப்பட தயாரிப்பாளர் தங்களை ஏமாற்றிவிட்டதாக இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் கூறுகின்றனர். இத்திரைப்படத்தின் கதையில் மாற்றம் செய்துள்ளார்கள் என்று திரைப்படத்தில் நடித்த சிண்டி லிகோர்ஷியா கூறுகிறார்.

இஸ்ரேல் நினைத்து செய்தது தற்போது நடந்துள்ளது. உலகம் முழுவதும் இஸ்ரேலின் (மொசாத்) தீவிரவாத அமைப்பு அனைத்து காரியங்களும் செய்து கொண்டு வருகிறது என்பதை வரும் நாட்களில் உலகம் அறியும்.

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!