Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, September 10, 2012

கூடங்குளம் அணு உலையில் அறப்போர்!!

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை உடனே நிறுத்தக்கோரி ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கடற்கரை வழியே பேரணியாக சென்றுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் பல்லாயிரக்கணக்கில் குவிந்திருக்கும் எதிர்ப்பாளர்களிடம் அரசுத் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை உடனே நிறுத்த வலியுறுத்தி அணு உலை எதிர்ப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை இடிந்தகரை சர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூடி பிரார்த்தனை செய்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி கூடங்குளத்தை நோக்கிச் சென்றனர். இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். ஆனால் அறிவித்த பாதையில் வராமல் இடிந்தகரையில் இருந்து கடற்கரை வழியாக சென்று கூடங்குளத்தின் பின்பகுதி வழியாக முற்றுகையிட பேரணியின் பாதை திடீரென மாற்றப்பட்டது.

இதனையடுத்து போலீசார் தங்களின் பாதுகாப்பு பணியை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. அதற்குள் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அணுமின் நிலையத்துக்கு மிக அருகில் கடற்கரையில் குவிந்துள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் வைராவி கிணறு கடற்கரை பகுதியில் அமர்ந்து பொதுமக்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கூடங்குளம் அணுஉலையில் எரிபொருளை நிரப்பக் கூடாது என்றும், அணுஉலையின் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் கோரிக்கைகையை ஏற்கும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் செல்வராஜ், காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரிஉள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அவர்களின் சமரச முயற்சியை போராட்டக் குழுவினர் ஏற்கவில்லை.

அணு உலைக்கு எதிரான போராட்டத்தையடுத்து மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் மாநில போலீசார் என சுமார் 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!