Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, August 29, 2014

இணையத்தில் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்!?

இணையத்தில் கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன.

அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கான எளிய வழியை மொசில்லா (Mozilla) முன் வைத்துள்ளது. பிரபலமான இணைய உலாவியான பயர்பாக்ஸ் பின்னே இருக்கும் மொசில்லா அமைப்பு இதற்காக ‘லைட்பீம்’ (Light Beam) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

பயர்பாக்ஸ் உலாவிக்கான சேர்க்கையாக (add on) அறிமுகமாகியுள்ள இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது எப்படி எல்லாம் உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கண்காணிப்பின் விவரங்களை இந்த சேவை காட்சிரீதியாக தோன்றச் செய்கிறது.

லைட்பீம் சேவையை உலாவியில் இயக்கியதும், இணையதளத்திற்கு செல்லும் போதெல்லாம் அந்த தளத்தில் இருந்து உங்களைப் பற்றிய விவரங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பது வரைபட சித்திரமாக காட்டப்படுகிறது. எந்த தளங்கள் எல்லாம் தகவல்களை சேகரிக்கின்றன என்பதை இந்த வரைபடம் உணர்த்தும். முதல் தளத்தில் இருந்து அடுத்த தளத்திற்கு செல்லும் போது அந்த தளத்தில் எப்படி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதும், இந்த தளங்களிடையே உள்ள பரஸ்பர தொடர்பையும் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட பகுதியில் கிளிக் செய்தால் கண்காணிப்பின் இயல்பு பற்றிய மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வரைபடத் தோற்றம் தவிர, கடந்த 24 மணி நேரத்தில் எந்த தளங்கள் விவரங்களை சேகரித்தன என்பதையும் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.

இணையத்தில் கண்காணிப்பு எப்படி செயல்படுகிறது, நீங்கள் உலாவும் தளங்கள் எப்படி மற்ற தளங்களுடன் உங்கள் இணைய நடவடிக்கை விவரங்களை பகிர்ந்து கொள்கின்றன போன்ற விஷயங்களை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். கண்காணிப்பை அடையாளம் காட்டும் இந்த சேவை மூலமான தகவல்கள் எதுவுமே சேகரிக்கப்படுவதில்லை என்கிறது மொசில்லா. ஆனால் நீங்கள் விரும்பினால் இந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முன் வரலாம். கண்காணிப்பு விவரங்களை புரிந்து கொள்வதற்கான பொது கையேட்டிற்கு இதன் மூலம் பங்களிக்கலாம் என்கிறது மொசில்லா.

கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கொல்யூஷன் எனும் வசதியின் நீட்சியாக இந்த லைட்பீம் உருவாகி இருக்கிறது.

Reactions:

2 comments :

Hi great blog! Does running a blog similar to
this require a large amount of work? I have virtually no understanding of computer
programming however I had been hoping to start my own blog in the near future.
Anyhow, should you have any recommendations or tips for new blog owners please share.

I know this is off subject but I just wanted to ask.

Kudos!

Feel free to surf to my web site; useful

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!