Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, December 7, 2012

காதலர்களுடன் ஓடுவதை தடுக்க கட்டுப்பாடு?

பாட்னா: காதலர்களுடன் ஓடுவதை தடுக்க பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பீகார் மாநிலம் கிசன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுந்தர்வாடி பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்கள் சிலர் தங்கள் காதலர்களுடன் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகார்களைத் தொடர்ந்து பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதன்படி, கோச்சடம் வட்டாரத்தின் கீழுள்ள சுந்தர்வாடி பஞ்சாயத்துப் பகுதியில் பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. மீறிப் பயன்படுத்தினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பஞ்சாயத்துக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இம்முடிவை அமல்படுத்துவதை மேற்பார்வையிட ஊர்க்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விசித்திர உத்தரவு பற்றி மாவட்ட நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதே போல, கடந்த ஜூலை மாதம் உத்தரப் பிரதேசத்திலும் நவம்பரில் ராஜஸ்தானிலும் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடையுத்தரவு போடப்பட்டது குறிப்பிடத் தக்கது.

1 comments :

இது மறுபடியும் பெண்களை அடிமைபடுத்தும் ஒரு செயலாக தான் தெரிகிறது....ஒன்று,இரண்டு பேரை வைத்து எடை போடதிர்கள்....அப்படி பார்த்தால் எத்தனையோ ஆண்கள் கூட அந்த தப்பை செய்கிறார்கள்....அவர்களுக்கும் இந்த தடையை போட்டிருக்கலாமே....ஏன் அவ்வாறு செய்யவில்லை.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!