Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, December 28, 2012

செல்போனின் சிக்கி சீரழிந்த இளம்பெண்!

கும்பளா(கேரளா): ஒரு நாட்டின் சட்டம் சரியாக இருந்தால்தான் தவறுகள் குறையும் ஆனால் இந்தியாவிலோ, அரசியல்வாதியோ, பணமும் புகழும் உள்ளவர்களோ ஏதாவது தவறு செய்தாலும் சட்டத்திலிருந்து தப்பிவிடலாம். ஆளுக்கு தகுந்தாற்போல் மாறும் சட்டம். இதுதான் இந்தியாவின் எப்போதும் உள்ள நிலை.

மொபைல் ஃபோனில் அறிமுகமான இளைஞரை சந்திக்க கேரளா மாநிலம் உப்பளாவிற்கு வந்த கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த இளம் பெண்ணொருவரை காம வெறிப்பிடித்த கயவர்கள் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். போனில் அறிமுகமான இளைஞனும், அவனது இரண்டு நண்பர்களும் சேர்ந்து ஆம்னி வேனில் இளம் பெண்ணை உப்பளாவில் இருந்து மங்களூர் வரை அழைத்து சென்று பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.

கும்பளாவில் நடக்க கூட முடியாமல் சோர்ந்து போய் இறக்கிவிடப்பட்ட பெண், அங்கு வந்த ஆட்டோவில் ஏறி அனாதை நிலையத்திற்கு கொண்டு போகுமாறு கூறியுள்ளார். ஆனால், ஆட்டோ டிரைவரும் ஒரு காம வெறிப்பிடித்த கயவன் ஆவான். அவன், இப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துஸ் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளான். கிறிஸ்துமஸ் இரவில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவ்வழக்கில் கும்பளாவில் உள்ள ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான கணேஷனை போலீஸ் கைது செய்துள்ளது. கர்நாடகா மாநிலம் கன்யானா பகுதியை சார்ந்த இளம்பெண், தந்தை மரணித்தவுடன், தாயார் மறு திருமணம் புரிந்துள்ளார். இதனால், மங்களூரில் ஒரு வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்பொழுது ஃபோனில் அறிமுகமான இளைஞர், அப்பெண்ணை உப்பளாவிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

உப்பளாவிற்கு வந்த பொழுது அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆம்னி வேனில் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிவிட்டு ரெயில்வே ஸ்டேசனில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். அப்பொழுது அந்த பெண் பேருந்து நிலையத்திற்கு வந்த ஆட்டோ டிரைவர் கணேஷனிடம் தன்னை அனாதை நிலையத்திற்கு கொண்டு விடுமாறு கூறிய பொழுதும், கணேஷன் அந்த பெண்ணை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் கூறுகிறது.

கணேஷன் அழைத்து சென்ற வேறு சிலரும் அந்த பெண்ணை வேட்டையாடியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு காரணமான குற்றவாளிகளை போலீஸ் பாதுகாப்பதாக குற்றம் சாட்டி டி.ஒய்.எஃப்.ஐ தர்ணா போராட்டம் நடத்தியது.

Reactions:

3 comments :

திரு பழனி கந்தசாமி அவர்களை வழி மொழிகிறேன்.

சகோ திரு, கந்தசாமி, திரு. பராரி, இருவருக்கும். நன்றி. யார் தவறு என்று கேட்டிருக்கிறீர்கள். மேற் குறுப்பிட்டதுபோல் சட்டங்கள் நீதியை தர தவறுவதாக தோன்றுகிறது. இங்கே சிறு விடயத்தை காண்போம். கற்பழிப்பு ஒரு கொலைக்கு சமம் என்கிறார்கள் அனைவரும், அப்படி இருக்க, நம் பக்கத்து மாநிலமான குஜராத்தை எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு மாநில முதல்வர் (மோடி) ஆணையின் பெயரில் எத்தனை கற்பழிப்பு , அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது, கூட்டு படுகொலை நடத்தினார்கள். இவர் இன்னும் தேர்தலில் நின்று ஜெய்க்க முடிகிறது என்றால் இந்திய சட்டமும், நீதியும் இவர்களை எந்த வகையிலும் தண்டிக்கவில்லை. (Double strandard)ஒருவரை தண்டிக்கும் சட்டம் வேறொருவரை தண்டிக்கவில்லை என்பதுதான் எனது கூற்று.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!