Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, December 6, 2012

பலர் வாழ்க்கையை புரட்டி போட்ட மினாமி?

பலர் வாழ்க்கையை புரட்டி போட சுனாமியால் மாத்திரம்தான் முடியுமா?, தகுதி இல்லாதவரை தேர்ந்தெடுத்தாலும் பலர் வாழ்க்கை இப்படித்தான். முதாளியாக இருந்தவர் இப்போது காவலாளி., ஆரிய கூத்தாடி ஜெயா' ஆட்சியில்.

நாள் ஒன்றுக்கு 16 முதல் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் பல குறுந்தொழில் முனைவோரின் ஜாப் ஆர்டர் பறிபோய் விட்டது. இந்த ஆர்டர்எல்லாம் சமீப காலமாக ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டன.

ஜாப் ஆர்டர் பறிபோன காரணத்தால் நிறைய குறுந்தொழில் முனைவோர் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டு, வேறு தொழிலை தேட துவங்கியுள்ளனர். இப்படிப்பட்டவர்களில் கணபதியை சேர்ந்த செல்வம் (32) என்பவரும் ஒருவர். இவர், கணபதியில் உள்ள பாலாஜி காம்ப்ளக்ஸ் நடேச கவுண்டர் 2வது வீதியில் முகுந்தன் பாலிமர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். பிளாஸ்டிக் மோல்டர் உதிரி பாகங்கள் தயாரித்து சப்ளை செய்து வந்தார். மின்வெட்டு காரணமாக உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால், ஜாப் ஆர்டர்களை இழந்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கம்பெனியை பூட்டிவிட்டு �காவலாளி’ வேலைக்கு சென்று வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலாளி’யாக இருந்து வந்த இவர், மின்வெட்டு காரணமாக காவலாளி’யாக மாறி விட்டார்.

இதுபற்றி செல்வம் கூறியதாவது: என்னால் முடிந்த அளவுக்கு முதலீடு செய்து ஆலையை இயக்கி வந்தேன். முன்பு, கம்பெனி வாடகை, வீட்டு வாடகை, வங்கி வட்டி, பிள்ளைகள் கல்வி கட்டணம் என எல்லா செலவுகளும் போக மீதம் 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. ஆனால், தற்போது, பகலில் 4 மணி நேரம்கூட தொடர்ச்சியாக மின்சாரம் இல்லை. இதனால், ஆலையை இயக்க முடியவில்லை. பிளாஸ்டிக் மோல்டு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக 8 மணி நேரம் மின்சாரம் இருந்தால்தான் ஆலைகளை இயக்க முடியும். ஏனென்றால் இங்குள்ள மெஷினரிகள் அப்படிப்பட்டவை. நன்றாக சூடேறிக்கொண்டு இருக்கும்போது மின்சாரம் போய்விட்டால் மீண்டும் அதை தயார்படுத்த இரண்டு மணி நேரம் ஆகும். தயாராகி வரும்போது மீண்டும் மின்சாரம் போய்விடுகிறது. இதனால், ஆலையை இயக்கவே முடியவில்லை.

என்னைப்போலவே இதர பிளாஸ்டிக் மோல்டு நிறுவனங்களும் மின்வெட்டு காரணமாக அடியோடு முடங்கி விட்டன. மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். இதற்கு வட்டிகூட செலுத்த முடியவில்லை. எனது குடும்பத்தினர் என்னை கேவலமாக பார்க்க துவங்கினர். எனது நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடன் வாங்கி இந்த ஆண்டு தீபாவளி போனஸ் கொடுத்தேன்.

இதற்கு பிறகும் கம்பெனியை நடத்த முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டதால் குடும்ப வருமானம் கருதி காவலாளி வேலைக்கு செல்ல துவங்கி விட்டேன். மாதம் ரூபாய் 8 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியுள்ளனர். இரண்டு வாரம்தான் ஆகிறது. இன்னும் முதல் மாத சம்பளம் வாங்கவில்லை. பல குறுந்தொழில் முனைவோர் மின்வெட்டு காரணமாக படாதபாடுபடுகின்றனர். அவர்களால், கீழே இறங்கி வந்து வேறு வேலை பார்க்க முடியவில்லை. அதற்கு மனம் இடம்கொடுக்கவில்லை. ஆனால், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் காவலாளி வேலைக்கு சென்று வருகிறேன். மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்ட பிறகுதான் என்னால் மீண்டும் கம்பெனியை நடத்த முடியும். தற்போது வாங்கும் சம்பளத்தை வைத்து வங்கி கடனுக்கு வட்டி செலுத்துவேன். மின்வெட்டு பிரச்னை என்னை தெருவுக்கு இழுத்து வந்துவிட்டது’ என கூறினார்.

தொடர்ச்சியாக 8 மணி நேரம் மின்சாரம் இருந்தால்தான் ஆலைகளை இயக்க முடியும். பிளாஸ்டிக் மோல்டு நிறுவனங்களும் மின்வெட்டு காரணமாக முடங்கி விட்டன.மாதம் ஒன்றுக்கு ரூபாய் 10 ஆயிரம் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். இதற்கு வட்டிகூட செலுத்த முடியவில்லை.எனது குடும்பத்தினர் என்னை கேவலமாக பார்க்க துவங்கினர். காவலாளி வேளையில் மாதம் ரூ.8ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியுள்ளனர்.

Reactions:

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!