Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, December 10, 2012

மனித உரிமை தினத்தில் உரிமை உண்டா!?

புதுடெல்லி: டிசம்பர் 10-ஆம் தேதி மனித உரிமை தினம் கடைப்பிடிக்கப்படும் இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், ஒடுக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று நம்புவதாக ஐக்கிய நாடுகள் அவையின் வர்கிங் க்ரூப் ஆன் ஹியூமன் ரைட்ஸ் கூறுகிறது.

மனித உரிமை மீறல்களை தடுக்க மத்திய அரசு உடனடியாக தலையிடவேண்டும் என்று மனித உரிமைகள் தொடர்பான வருடாந்திர அறிக்கையை வெளியிட்ட W.G.H.R கன்வீனர் மிலூன் கோத்தாரி கூறினார்.

கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் ராணுவம் மயமாக்கல் நடந்துள்ளதாக வருடாந்திர அறிக்கை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மனித உரிமை ஆர்வலர் பிருந்தா க்ரோவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது: “இந்தியாவில் பெருமளவில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு கறுப்புச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சமூக-பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களையும், அரசியல் எதிரிகளையும் அடக்கு ஒடுக்கவும், வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் அரசு இவற்றைச் செய்துள்ளது. ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கையை அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. சட்டம் ஒழுங்கை பேணுகிறோம் என்ற பெயரில் சட்டத்தின் பாதுகாவலர்கள் அக்கிரமங்களுக்கு தலைமை வகிக்கின்றனர். போலி என்கவுண்டர்களும், அநீதமான சிறைக்காவல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நாட்டின் பல பகுதிகளில் நடந்தேறிவருகிறது. அமைதியான முறையில் போராடுபவர்களை கூட கொடுமைப்படுத்தும் செயல் நடக்கிறது” என்று பிருந்தா க்ரோவர் கூறினார்.

பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மேலும் ஏழ்மையையும், மனித உரிமை மீறல்களையுமே உருவாக்குகிறது என்று ஹவுஸிங் அண்ட் லாண்ட் ரைட்ஸ் நெட்வர்கின் நிர்வாகி சிவானி சவுதரி கூறினார். உலகில் அதிகமான மக்கள் பட்டினியில் வாடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வளர்ச்சிக்கு பலியாகி வருடந்தோறும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிபெயர்க்கப்படுகின்றனர். பொருளாதார வளர்ச்சி குறையும் வேளையில் அவசரக் கூட்டங்களை நடத்தி தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு, சமூக பிரச்சனைகளை தீவிரவமாக கருதுவதில்லை என்று சிவானி சவுதரி குற்றம் சாட்டினார்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!