Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, October 8, 2012

பொய்யுரைத்து போக்கிரித்தனம் செய்யும் பொ(பே)ய் அரசு?

டெல்லி: விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்துவதற்காக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையில் ரூ. 11.42 உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் மானிய கட்டுப்பாட்டுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ள இந்நிலையில், சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான சிலிண்டர் விநியோகத்திற்கு இதுவரை 25 ரூபாய் 83 காசுகள் கமிஷனாக வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை தற்போது 37 ரூபாய் 25 காசுகளாக உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயுக்கான விநியோகஸ்தர்களின் கமிஷன் உயர்த்தப்பட்டிருப்பதால் இது நுகர்வோர் தலையில்தான் போய் விழும்.

இதனிடையே, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 23 பைசாவும், டீசலுக்கு 10 பைசாவும் விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்த பெட்ரோலிய அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு கமிஷன் தொகை உயர்த்தப்பட்டால் பெட்ரோல், டீசல் விற்பனை விலையும் விரைவில் உயர்த்தப்படும் என தெரிகிறது.

கமிஷன் தொகை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சிலிண்டர் விலை உயர்வு குறித்து இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அதிகாரபூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற நாள் முதல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பொதுமக்களைப் பற்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கடுகளவும் கவலை இருப்பதாக தெரியவில்லை. ஆனால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் இதனை நியாயப்படுத்தி வருகின்றனர் பிரதமரும், அமைச்சர்களும்.,ஆனால் மக்களோ கோபத்தில் அவரவருக்கு அங்கலாய்த்து கொண்டு உள்ளனர்.

2 comments :

விளிப்புனர்வுடன் பகுத்தறிவு பெற்ற சமூகம் விரைவில் மலர வேண்டும்,,

ஒன்றுபடுவோம்.. உண்மையை உரக்க சொல்வோம்..

பகிரப்படட்டும் உங்கள் பதிவு,,

தொடருங்கள்!!

நாம் அனைவரும் இந் நிலை மாற ஒன்று சேர்த்து பாடுபடுவோம்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!