பக்கவாத நோய் என்பது திடீரென்று மூளைக்கு செல்லும் ரத்தகுழாயில் ஏற்படும் பாதிப்பாகும். உலகம் முழுவதும் மரணத்தை உண்டாக்கும் முக்கியமான நோயாக பக்கவாதம் உள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் 48 லட்சம் பேர் பக்கவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களில் 88 சதவீதம் பேர் ரத்தகுழாய் அடைப்பினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு ஆளாகின்றனர். இந்தியாவில் 40 வயதுக்குள் உள்ள 15 சதவீதம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
உலக பக்கவாத நோய் தினத்தை முன்னிட்டு, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையில் ரத்த அடைப்பை சரிசெய்யும் சிகிச்சை பிரிவு இன்று தொடங்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டுமே ரத்த அடைப்பால் ஏற்படும் பக்கவாதத்திற்கு ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள ஊசி இலவசமாக (முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம்) போடப்படுகிறது. இந்த ஊசியால் பக்கவாதத்தால் ஏற்படும் ரத்த குழாய் அடைப்பை முழுவதுமாக சரி செய்யலாம். (ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29ம் தேதி ‘உலக பக்கவாத நோய் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.)
2 comments :
தகவலுக்கு நன்றி
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.........
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment